» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அனல் மின்நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

புதன் 16, ஏப்ரல் 2025 7:46:20 AM (IST)

தூத்துக்குடியில் ஊதிய உயர்வு கோரி என்டிபிஎல் அனல் மின்நிலையம் முன்பாக ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீதிமன்ற உத்தரவின்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும், வட்டாட்சியர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையின்போது ஒப்புக்கொண்ட அம்சங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தூத்துக்குடியில் என்டிபிஎல் அனல் மின்நிலையம் முன்பாக ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் எஸ்.அப்பா துரை தலைமை வகித்தார். இதில், சிஐடியூ மாநிலச் செயலர் ஆர்.ரசல், மாவட்டத் தலைவர் பேச்சிமுத்து, மின்ஊழியர் மத்திய அமைப்பு தெர்மல் செயலர் கணபதி சுரேஷ் , நிர்வாகிகள் சங்கரன், பென்சில், என்டிபிஎல் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory