» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள், ஓட்டுநர்கள் கோரிக்கைகளுக்கு சுமூக தீர்வு!
திங்கள் 17, மார்ச் 2025 10:52:17 AM (IST)
தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படும் என பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு காணப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 365 நாளும் ஓய்வில்லாமல் பணிபுரிந்து வருகின்றனர். வழங்கும் கூலி வாழ்க்கை கூலியாக இல்லை. மாவட்ட ஆட்சியர் அறிவித்த படி தூய்மை தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச கூலி ஆணையின்படி கனரக தூய்மை ஓட்டுனர்களுக்கு ரூ.636, தூய்மை இலகுரக ஓட்டுநர்களுக்கு ரூ.598, தூய்மை பணியாளர்களுக்கு ரூ.497 வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர் மற்றும் ஓட்டுநர் கோரிக்கைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன் முன்னிலையில் நடந்தது. பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
இதில் தொழிலாளர்களுக்கு 2024 மற்றும் 2025 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவித்த GO, குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படும் என்று முடிவானது. தொழிலாளர்களுடைய PF, ESI, முறையாக தொழிலாளர் கணக்கில் வரவு வைத்து இஎஸ்ஐ கார்டு அனைத்து தொழிலாளர்களுக்கும் கொடுக்க ஆவணம் செய்யப்படும் என்று ஒப்பந்த நிறுவனம் ஏற்றுக் காெண்டது. பேச்சுவார்த்தையில் ஏஐசிசிடியூ தொழிற்சங்கத்தச் சேர்ந்த சகாயம், பொன்ராஜ், மின்னல் அம்ஜித், சிவராமன் முருகன் பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு பஸ் பாஸ் வழங்கிட சிறப்பு முகாம் : ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 13, ஜனவரி 2026 8:20:33 PM (IST)

ஜன.14ம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் : முதல்வருக்கு கோரிக்கை!
செவ்வாய் 13, ஜனவரி 2026 8:08:26 PM (IST)

சுற்றுச்சுழலைப் பாதிக்காத வகையில் போகி பண்டிகை கொண்டாட வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
செவ்வாய் 13, ஜனவரி 2026 5:47:24 PM (IST)

நல்லாயன் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
செவ்வாய் 13, ஜனவரி 2026 5:36:12 PM (IST)

கோவில்பட்டியில் களைகட்டிய பொங்கல் விழா : இளவட்டக்கல் தூக்கி அசத்திய மாணவர்கள்!
செவ்வாய் 13, ஜனவரி 2026 5:05:23 PM (IST)

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது!
செவ்வாய் 13, ஜனவரி 2026 5:02:18 PM (IST)








