» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

திங்கள் 24, பிப்ரவரி 2025 8:24:23 AM (IST)



தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செயல்படும் நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி பாத்திமா நகர் ஆலயம் முன்பு பாண்டியாபதி தேர்மாறன் கல்லறை மீட்புக் குழு மற்றும் அனைத்து பரதவ ஊர்க் கமிட்டி சார்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவின்பேரில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செயல்பட்டு தூத்துக்குடி மாநகர மக்களை பதட்டத்திற்கு உள்ளாக்கி வரும் நபர்கள் குறித்தும், அவர்கள் மீது நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட மக்களினுடைய ஒற்றுமையை சீர்குலைக்கும் விதத்தில் செயல்படும் இனத் துரோகிகள் மீது உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். வரும் காலங்களில் இதேபோல் நகரத்திற்கு எதிராக செயல்பட்டு கொண்டிருக்கும் ஒரு சில  நயவஞ்சகர்கள் மீண்டும் தலையெடுக்காதவாறு மாவட்ட ஆட்சியரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும்  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மிக விரைவில் தூத்துக்குடியில் உள்ள அனைத்து சமுதாய தலைவர்கள் மற்றும் அனைத்து அமைப்புகள் சார்ந்த ஒன்றிணைத்து தூத்துக்குடி ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் சந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளோம். ஆலைக்கு ஆதரவாக எந்த இந்த விஷமிகள் வந்தாலும் அந்த விஷமிகளை ஒட்டுமொத்த நகர மக்களின் பேராதவருடன் வீழ்த்துவோம். 

உச்ச நீதிமன்றம் உத்தரவு மாநில அரசின் நடவடிக்கை அந்த ஆலையை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தி அந்த மண்ணுக்காக மக்களுக்காக உயிர் நீத்த 15 பேருடைய திருஉருவம் தாங்கிய மணிமண்டபம் நினைவிடம் கட்டி எழுப்பி அரசு உரிய மரியாதை வழங்க வேண்டும். மாநகர மக்களுக்கு அச்சத்தை போக்க ஒரு சில ஆலைக்கு ஆதரவாக அலைகின்ற ஒரு சில நபர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திறகும் கோரிக்கை வைப்போம் என தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory