» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாலிபரை தாக்கியதாக உறவினர்கள் 3 பேர் கைது
வெள்ளி 21, பிப்ரவரி 2025 8:03:02 PM (IST)
சாத்தான்குளம் அருகே மதுகுடிப்பதை கண்டித்து வாலிபரை தாக்கிய அவரது உறவினர்கள் 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள கட்டாரிமங்கலம் கீழத்தெருவை சேர்ந்தவர் வீரமணி மகன் மாயாண்டி(23). சவுண்ட் சர்வீஸ் கடை ஊழியர். இவருக்கு மதுபழக்கம் காரணமாக ஊதாரித்தனமாக சுற்றித்திரிந்தாராம்.
இந்நிலையில் கடந்த 16ம்தேதி மாயாண்டியிடம், அவரது சித்தப்பா உறவு முறையான அதே பகுதியை சேர்ந்த தளவாய்மணி (39), வீரமணி(40), ரமேஷ்(35) ஆகியோர் நீ குடிப்பதால் எங்களுக்கு அவமானமாக இருக்கிறது. எனவே குடிப்பழக்கத்தை கைவிடு என்று அறிவுரை கூறினார்களாம். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த தளவாய் மணி உள்ளிட்ட 3 பேரும் மாயாண்டியை அவதூறாக பேசி தாக்கினர். இதில் காயம் அடைந்த அவர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் நாககுமாரி வழக்குபதிந்து தாக்குதலில் ஈடுபட்ட தளவாய்மணி, வீரமணி, ரமேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா : முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
சனி 20, டிசம்பர் 2025 8:40:10 PM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்
சனி 20, டிசம்பர் 2025 6:23:18 PM (IST)

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் ஸ்டார் விற்பனை ஜோர்!
சனி 20, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

தூத்துக்குடியில் சமூகத்தணிக்கை குழுவிற்கான பயிற்சி முகாம்
சனி 20, டிசம்பர் 2025 5:23:37 PM (IST)










