» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழ்நாட்டில் கஞ்சா தாராளமாக புழங்குகிறது : முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு!
வெள்ளி 21, பிப்ரவரி 2025 7:55:18 PM (IST)

தமிழ்நாட்டில் கஞ்சா தாராளமாக புழங்குகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட மேலநம்பிபுரம், புதூர், சின்னவநாயக்கன்பட்டி, சல்லிசெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் புதூர் ஒன்றியத்திற்கான பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ தலைமை வகித்து கட்சியினரிடம் பேசுகையில், "தமிழக மக்களுக்காக அதிமுக கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது. தமிழகத்தில் தற்போது கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து காணப்படுகிறது என திமுக அரசை விமர்சனம் செய்து பேசினார்.
மேலும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பூத் கமிட்டி நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து கட்சியினருக்கு ஆலோசனை வழங்கி பூத் கமிட்டியில் இளைஞர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். கழகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் பிரிவில் அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று கூறியதோடு கட்சி நிர்வாகிகளுக்கு உறுப்பினர் சேர்க்கை பதிவு விண்ணப்ப படிவங்களை வழங்கினார்.
ஆலோசனைக் கூட்டத்தில், விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், ஒன்றிய செயலாளர்கள் தனவதி, சுசீலா தனஞ்செயன், ஆண்டி உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா : முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
சனி 20, டிசம்பர் 2025 8:40:10 PM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்
சனி 20, டிசம்பர் 2025 6:23:18 PM (IST)

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் ஸ்டார் விற்பனை ஜோர்!
சனி 20, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

தூத்துக்குடியில் சமூகத்தணிக்கை குழுவிற்கான பயிற்சி முகாம்
சனி 20, டிசம்பர் 2025 5:23:37 PM (IST)










