» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கஞ்சா, போதை மாத்திரை வழக்கில் கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் கைது
வெள்ளி 21, பிப்ரவரி 2025 3:35:13 PM (IST)
தூத்துக்குடியில் கஞ்சா, போதை மாத்திரைகள் வைத்திருந்ததாக கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி, போதைப் பொருள் தடுப்பு சிறப்பு படை பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் திருச்செந்தூர் ரோட்டில் உள்ள ஒரு கல்லூரி அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த கல்லூரி மாணவர்களை பிடித்து போலீசார் சோதனை நடத்தினர்.
இதில் அவர்களிடம் 6 பாக்கெட் கஞ்சாவும், 50 போதை மாத்திரைகளும் இருந்தது, தெரியவந்தது. இதையடுத்து நடத்திய விசாரணையில் அவர்கள் 3 பேரும் தூத்துக்குடி, அமுதா நகரைச் சேர்ந்த ரூபக் ராஜேஷ் (19), லெவஞ்சிபுரத்தைச் சேர்ந்த சிம்சான்ராஜ் (19), அண்ணா நகரைச் சேர்ந்த வெங்கடேஷ் (23) என்பது தெரியவந்தது. இவர்களில் ரூபக் ராஜேசும், சிம்சான் ராஜூம் கல்லூரியில் பி.காம் படித்து வருகின்றனர். வெங்கடேஷ் பிகாம் முடித்துள்ளார்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் 3 பேருக்கும் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை சப்ளை செய்த தூத்துக்குடி, மில்லர்புரத்தைச் சேர்ந்த பொன்ராஜ் (45) என்பவரையும் போலீசார் பிடித்தனர். இவர்கள் 4 பேரையும், பேரையும் தூத்துக்குடி தென்பாகம் போலீசில், போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்து கஞ்சா, போதை மாத்திரை கஞ்சா கள் மற்றும் 4 செல்போன்கள், ரூ.3200 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் 4 பேரையும் தென்பாகம் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா : முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
சனி 20, டிசம்பர் 2025 8:40:10 PM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்
சனி 20, டிசம்பர் 2025 6:23:18 PM (IST)

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் ஸ்டார் விற்பனை ஜோர்!
சனி 20, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

தூத்துக்குடியில் சமூகத்தணிக்கை குழுவிற்கான பயிற்சி முகாம்
சனி 20, டிசம்பர் 2025 5:23:37 PM (IST)










