» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாசரேத்தில் ராஜ்ய புரஸ்கார் விருதுக்கான தேர்வு: 150 சாரண- சாரணியர்கள் பங்கேற்பு!
வெள்ளி 21, பிப்ரவரி 2025 12:49:45 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் வைத்து நடைபெற்ற ராஜ்ய புரஸ்கார் விருதுக்கான தேர்வில் சுமார் 150 சாரண, சாரணியர்கள் பங்குபெற்றனர்.
திருச்செந்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பாரத சாரண-சாரணியர் படை இயங்கி வருகிறது. இந்த படை மூலம் சிறப்பாக சேவையாற்றும் சாரணர் மற்றும் சாரணியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் குடியரசு தினத்தன்று, ராஜ்ய புரஸ்கார் விருதினை தமிழக கவர்னர் வழங்கி கவுரவிப்பார்.
அந்த வகையில் இந்தாண்டுக்கான சிறந்த சாரண-சாரணியர்களை தேர்ந்தெடுக்கும் ராஜ்ய புரஸ்கார் விருது தேர்வு முகாம் நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் வைத்து நடைபெற்றது. முகாமிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் குணசீலராஜ் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம் முன்னிலை வகித்தார். இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
தேர்வாளர்களாக மாநில சாரணர் இயக்க முதன்மைத் தேர்வாளர் பிரான்சிஸ் அலாய், பவானிபாய், திருச்செந்தூர் கல்வி மாவட்ட சாரணர் இயக்க ஆணையர் சாமுவேல் சத்தியசீலன், ஒருங்கிணைப்பாளர் காந்திமதி ஆகியோர் கலந்து கொண்டனர். இம் முகாமில் திருச்செந்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த சாரண, சாரணியர்கள் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு எழுத்துத் தேர்வு, கூடாரம் அமைத்தல் செய்முறை தேர்வு, கொடி பாடல், இறை வணக்கப் பாடல், சாரணர் இயக்கத்தின் விதிமுறைகள் குறித்த தேர்வு ஆகியவை நடத்தப்பட்டது. மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு பெறுகிற சாரண, சாரணியர்கள் ராஜ்ய புரஸ்கார் விருது பெறுவதற்கு பரிந்துரைக்கப்படுகின்றனர்.
இம் முகாமிற்கான ஏற்பாடுகளை திருச்செந்தூர் கல்வி மாவட்ட சாரண, சாரணியர் இயக்கத்தின் செயலாளர் சிவக்குமார், பொருளாளர் ஆபிரகாம் இம்மானுவேல், ஆங்கில ஆசிரியர் ஸ்டீபன் பிரேம்குமார், தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வ சுந்தர், ஓவியக் கலை ஆசிரியர் அலெக்சன் கிறிஸ்டோபர், உடற்கல்வி ஆசிரியர் தனபால் மற்றும் ஆசிரியர்கள் அலுவலர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா : முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
சனி 20, டிசம்பர் 2025 8:40:10 PM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்
சனி 20, டிசம்பர் 2025 6:23:18 PM (IST)

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் ஸ்டார் விற்பனை ஜோர்!
சனி 20, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

தூத்துக்குடியில் சமூகத்தணிக்கை குழுவிற்கான பயிற்சி முகாம்
சனி 20, டிசம்பர் 2025 5:23:37 PM (IST)










