» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி விவிடி சிக்னல் சந்திப்பு பகுதியில் எஸ்பி திடீர் ஆய்வு
வெள்ளி 21, பிப்ரவரி 2025 10:11:32 AM (IST)

தூத்துக்குடி விவிடி சிக்னல் சந்திப்பு பகுதியில் போக்குவரத்து பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விவிடி சிக்னல் சந்திப்பு பகுதியில் காவல்துறையினரின் போக்குவரத்து பாதுகாப்பு பணியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஆல்பர்ட் ஜான் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு காவல்துறையினருடன் இணைந்து போக்குவரத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தூத்துக்குடியில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த RSP (Road Safety Patrol) மாணவர்களின் தன்னார்வத்தையும் சேவை மனப்பான்மையையும் பாராட்டி, போக்குவரத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போது கவனமாகவும், பிரதிபலிப்பு ஜாக்கெட் (Reflecting Jacket) அணிந்தும் போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார்.
மேலும் பள்ளியிலும் கல்வியை சிறப்பாக பயின்று எதிர்காலத்தில் சாதனையாளர்களாக வர வேண்டும் என்றும் அந்த மாணவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வாழ்த்தினார். இந்நிகழ்வின்போது தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன் உட்பட காவல்துறையினர் மற்றும் RSP அமைப்பின் பொறுப்பாளர் ஜட்சன் ஆகியோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா : முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
சனி 20, டிசம்பர் 2025 8:40:10 PM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்
சனி 20, டிசம்பர் 2025 6:23:18 PM (IST)

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் ஸ்டார் விற்பனை ஜோர்!
சனி 20, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

தூத்துக்குடியில் சமூகத்தணிக்கை குழுவிற்கான பயிற்சி முகாம்
சனி 20, டிசம்பர் 2025 5:23:37 PM (IST)











MakkalFeb 21, 2025 - 04:33:27 PM | Posted IP 172.7*****