» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சுதா கருத்தரிப்பு மையம் துவக்க விழா : மார்ச் 2ம் தேதி இலவச முகாம்
வெள்ளி 21, பிப்ரவரி 2025 10:03:36 AM (IST)

தூத்துக்குடி அற்புதம் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சுதா கருத்தரிப்பு மையம் துவக்க விழாவை முன்னிட்டு குழந்தையின்மை மகளிர் நலம் மற்றும் கர்ப்பப்பை சிகிச்சைகளுக்கான இலவச மருத்துவ ஆலோசனைகளை மார்ச் 2ம் தேதி வழங்குகிறது.
தமிழகம், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இயங்கிவரும் சுதா கருத்தரிப்பு மையம் தூத்துக்குடி தேவர்புரம் ரோடு நீதிபதி குடியிருப்புகளுக்கு எதிர்புறம் அமைந்துள்ள அற்புதம் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மார்ச் 2ம் தேதி தொடங்குகிறது. முன்னாள் தூத்துக்குடி நாசரேத் பிஷப் எஸ்.இ.தேவசகாயம் ஜெபம் செய்கிறார்.
திண்டுக்கல் அரசன் குரூப் சேர்மன் டி.உலகுடையராஜா, கிரேஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் எஸ்.ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். சுதா ஹாஸ்பிடல்ஸ் நிர்வாக இயக்குநர் டாக்டர்.கே.சுதாகர், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர் வி.ஜேம்ஸ் சுந்தர்சிங், அற்புதம் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் எம்.எஸ்.ஜூலியஸ் ஆம்ஸ்ட்ராங் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
தூத்துக்குடி சுதா கருத்தரிப்பு மையத்தை திண்டுக்கல் சிட்டி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ஆர்.முரளிதரன் திறந்து வைக்கிறார். துவக்க விழாவை முன்னிட்டு குழந்தையின்மை மகளிர் நலம் மற்றும் கர்ப்பப்பை சிகிச்சைகளுக்கான இலவச மருத்துவ ஆலோசனைகளை மார்ச் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4மணி வரை சிறப்பு மருத்துவர்களால் வழங்கப்படுகிறது.
ஈரோடு, சேலம், கோயம்புத்தூர், சென்னை, மதுரை, திருச்சி, ஹைதராபாத், பெங்களூரு, கொழும்பு, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிளைகளுடன் இயங்கி வருகிறது. 24 மணி நேரமும் கருவுறுதல் ஆலோசகர்கள் உள்ளனர். IVF, IUI, TESA, PESA, IMSI, ICSI, PICSI, பிளாஸ்டோசிஸ்ட் கல்ச்சர், கிரையோபிரெசர்வேஷன், சரோகசி, PGD, லேசர்-அசிஸ்டட் ஹேச்சிங், HD லேப்ராஸ்கோபிக் சர்ஜரிகள், மைக்ரோ TESE, ஃபெட்டல் மெடிசின், ஓசைட் ஃப்ரீசிங் போன்ற உலகத்தரம் வாய்ந்த கருவுறுதல் மேலாண்மை சேவைகளை வழங்கி வருவதாக சுதா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முகாமிற்கான ஏற்பாடுகளை அற்புதம் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நிர்வாக அதிகாரி ஜெபன், மேலாளர் ரூபன், சுதா கருத்தரிப்பு மையம் தூத்துக்குடி அதிகாரி ஆனந்த் ஆகியோர் செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா : முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
சனி 20, டிசம்பர் 2025 8:40:10 PM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்
சனி 20, டிசம்பர் 2025 6:23:18 PM (IST)

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் ஸ்டார் விற்பனை ஜோர்!
சனி 20, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

தூத்துக்குடியில் சமூகத்தணிக்கை குழுவிற்கான பயிற்சி முகாம்
சனி 20, டிசம்பர் 2025 5:23:37 PM (IST)










