» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வணிக அதிகார பிரகடன மாநாடு ஆலோசனைக் கூட்டம்: மாநில தலைவர் விக்கிரம ராஜா பங்கேற்பு!
வெள்ளி 21, பிப்ரவரி 2025 8:14:55 AM (IST)

திருச்செந்தூரில் 42வது வணிக அதிகார பிரகடன மாநாடு குறித்து தெற்கு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 42வது வணிக அதிகார பிரகடன மாநாடு குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் திருச்செந்தூர் ராஜ் மஹாலில் நடந்தது. மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வைத்தார். திருச்செந்தூர் அனைத்து வணிகர் நல சங்க தலைவர் பாரதி சுரேஷ் வரவேற்று பேசினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரம ராஜா கலந்து கொண்டு பேருரை ஆற்றினார். மாநில செயலாளர் கோவிந்தராஜுலு, பொருளாளர் சதக்கத்தூல்லா, தலைமைச் செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாநில செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், துணைத் தலைவர் வெற்றி ராஜன், மாநில இணை செயலாளர் தசரத பாண்டியன், ஜெபஸ்திலகராஜ், பீட்டர், கன்னியாகுமரி மண்டல தலைவர் வைகுண்டராஜன், மாவட்ட செயலாளர் கண்ணன், பொருளாளர் அருணாச்சலம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிறப்பு அழைப்பாளர்களாக சந்திரன், நாராயணன், அருள்ராஜா, தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருச்செந்தூர் அனைத்து வணிகர் நலச்சங்க செயலாளர் கவாஸ்கர் அன்பளிப்பு வழங்கினார். பொருளாளர் ஜாபர் அலி நன்றி கூறினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை இளைஞர் அணி அம்ரோஸ் செய்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா : முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
சனி 20, டிசம்பர் 2025 8:40:10 PM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்
சனி 20, டிசம்பர் 2025 6:23:18 PM (IST)

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் ஸ்டார் விற்பனை ஜோர்!
சனி 20, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

தூத்துக்குடியில் சமூகத்தணிக்கை குழுவிற்கான பயிற்சி முகாம்
சனி 20, டிசம்பர் 2025 5:23:37 PM (IST)










