» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் நகராட்சியை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 21, பிப்ரவரி 2025 8:07:58 AM (IST)

திருச்செந்தூரில் மாசித் தேரோட்டம் நடைபெறும் சாலையை எந்தவித முன் அறிவிப்பும் இன்றி சேதப்படுத்திய நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பல கோடி ரூபாய் செலவில் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் தேரோட்டத்திற்காக போடப்பட்ட கான்கிரீட் சாலைகளை மாசி தேரோட்டம் நடைபெறும் நேரத்தில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி சேதப்படுத்தியதை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகரத் தலைவர் செல்வ குமரன், முன்னாள் நகர தலைவர் நவமணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பொதுச் செயலாளர் ராஜா ,சத்தியசீலன் மாநில ஓபிசி அணி துணைத்தலைவர் விவேகம் ரமேஷ், மாவட்ட துணை தலைவர் செல்வராஜ், சரஸ்வதி, பாலாஜி, மாவட்ட செயலாளர் பாப்பா, கனல் ஆறுமுகம், பொருளாளர் சண்முகசுந்தரம், மாவட்ட துணை தலைவர் சிவராமன், மாவட்ட பிற மொழி பிரிவு தலைவர் ஜெயா நாச்சியார், சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட தலைவர் ஸ்டீபன் லோபோ, ஐடி விங் மாவட்ட துணைத் தலைவர் சத்யராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் திருநாகரன், உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா : முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
சனி 20, டிசம்பர் 2025 8:40:10 PM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்
சனி 20, டிசம்பர் 2025 6:23:18 PM (IST)

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் ஸ்டார் விற்பனை ஜோர்!
சனி 20, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

தூத்துக்குடியில் சமூகத்தணிக்கை குழுவிற்கான பயிற்சி முகாம்
சனி 20, டிசம்பர் 2025 5:23:37 PM (IST)










