» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ரயிலில் செல்போன் திருடிய 2வாலிபர்கள் கைது!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 7:39:41 PM (IST)

கோவில்பட்டி அருகே ரயிலில் செல்போன் திருடிய 2வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் உள்ள பொம்மபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னப்பிரகாஷ் மகன் அபின் (21), இவர் மதுரையில் இருந்து புனலூர் செல்லும் ரயிலில் கிருவனந்தபுரம் சென்று கொண்டிருந்தார். சாத்தூர் - கோவில்பட்டி இடையே ரயில் வந்து கொண்டிருந்தபோது திடீரென இவரது செல்போன் காணாமல் போய்விட்டது. இதன் மதிப்பு ரூபாய் 12000 ஆகும். இதுகுறித்து உடனடியாக அபின் கோவில்பட்டி இருப்புப் பாதை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் பெருமாள் விசாரணை நடத்தினார்.
அப்போது ரயில் நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தார். விசாரணையில் செல்போனை திருடியது மதுரை மாவட்டம் திருமங்கலம் சந்தைப்பேட்டை கிராமத்தை சேர்ந்த நாகேந்திரன் மகன் ராஜ்குமார் என்ற மின்னல் (26), பட்டுநூல்காரன் பேட்டை சேர்ந்த அப்துல் ரஹீம் மகன் தாஜுதீன் (20) என்று தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2பேரையும் கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் 2பேரையும் தூத்துக்குடி ரயில்வே காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டனர். தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பின்னர் பேரூரணி மாவட்ட சிறை சாலையில் 15 நாள காவலில் வைக்கப்பட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)










