» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ரூ.1கோடி கடனுதவி : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்

வெள்ளி 14, பிப்ரவரி 2025 3:47:33 PM (IST)



முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடனுதவி பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள்/ சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு 2025-ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் இன்று(14.02.2025) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட்டு, உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்கள் தொடர்பான மனுக்களை உடனுக்குடன் பரிசீலித்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு, இலவச வீட்டுமனைப் பட்டா, கடனுதவி, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை என பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில், 2025-ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இன்றையக் கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள்/ சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 26 மனுக்கள் பெறப்பட்டன.

அதுமட்டுமல்லாமல், தாய்நாட்டிற்காகத் தங்களது இளம்வயதை இராணுவப் பணியில் கழித்து பணிக்காலம் நிறைவு பெற்ற, ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்களது பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்திடவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள். 

இத்திட்டத்தின்கீழ், முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடனுதவி பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில், 30 விழுக்காடு மூலதன மானியமும், 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படுகிறது. இவர்களுக்குத் திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும்.

இராணுவப் பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினரும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். எனவே, முன்னாள் படைவீரர்களின் நலன்காக்கும் வகையிலும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் செயல்படுத்தப்பட்டுள்ள ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ என்ற மகத்தான திட்டத்தினை முன்னாள் படைவீரர்கள் அனைவரும் தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் தெய்வசிகாமணி, பொது மேலாளர் (மாவட்ட தொழில் மையம்) ஸ்வர்ணலதா, முன்னோடி வங்கி மேலாளர் துரைராஜ், முன்னாள் படைவீரர்கள், அவர்தம் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education





Arputham Hospital




Thoothukudi Business Directory