» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கூடுதல் வரி, அடாவடி வசூல்: தூத்துக்குடி மாநகராட்சிக்கு வணிகர் சங்கம் கடும் கண்டனம்
வெள்ளி 7, பிப்ரவரி 2025 3:56:52 PM (IST)

தூத்துக்குடியில் மனிதாபிமானமற்ற முறையில் வரிவசூல் செய்வதாக மாநகராட்சிக்கு கண்டனம் தெரிவித்து வணிகர் சங்கங்களின் பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, நகர வர்த்தகர்களின் மத்திய சங்கம், திருமண மண்டப உரிமையாளர்கள் சங்கம் மற்றும் சட்ட விதிகளை பின்பற்றாமல் விதிமீறலில் மனிதாபிமானமற்ற முறையில் உயர்த்தப்பட்ட வரியால் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று கூடி அடுத்த கட்ட நகர்வு குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில துணை தலைவரும் மத்திய சங்க வழிகாட்டியுமான பொன் தனகரன் தலைமை வகித்தார். மத்திய சங்க தலைவர் ஜவஹர் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சியின் சட்ட விதிகளை பின்பற்றாமல் மனிதாபிமானமற்ற முறையில் விதிமீறலில் உயர்த்தப்பட்ட வரி உயர்வுக்கும், அதனை செலுத்தாத சொத்தின் உரிமையாளர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
கூடுதல் வரி வசூலிப்பதற்கு யாரும் அடிபணிந்து உயர்வான வரியினை செலுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. உடனடியாக வரி உயர்வினை திரும்ப பெற வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், மேயர், முதல்வர், நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் ஆகியோருக்கு மனு அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.
மனு கொடுத்து ஒருவார காலத்தில் துரித நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திடவும், அதனை தொடந்து முழு கடையடைப்பு நடத்திடவும் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. சட்ட விதிகளை பின்பற்றாமல் விதிமீறலில் மனிதாபிமானமற்ற முறையில் உயர்த்தப்பட்ட கூடுதல் வரி மற்றும் அதனை வசூல் செய்யும் அடாவடி நடவடிக்கைகளை எதிர்த்து போராட குழு அமைக்கப்பட்டது.
அந்த குழுவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பாக 7 பேரும், தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கம் சார்பாக 7 பேரும், மண்டப உரிமையாளர்கள் சங்கம் சார்பாக 7 பேரும், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் 9 பேரும் சேர்த்து 30 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்.
மக்களுக்கான அரசு நிர்வாகமாக இல்லாமல் வட்டி கடை நடத்துவது போல கட்டவேண்டிய நடப்பு வரிக்கே முதல் பகுதி பாக்கி என்று ஒன்றை புதிதாக உருவாக்கி வட்டி போட்டு வாங்கும் நிலையையும் கைவிட வேண்டும் கூட்டத்தில் தூத்துக்குடியில் உள்ள அனைத்து மண்டப உரிமையாளர்கள், பெரும் வணிகர்கள், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் சட்ட விரோத வரி உயர்வால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான கட்டிட உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 7:49:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் விருப்ப மனு
புதன் 17, டிசம்பர் 2025 7:42:57 PM (IST)











MANIKANDAN BFeb 11, 2025 - 04:34:11 PM | Posted IP 162.1*****