» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சமூகத் தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்
சனி 19, அக்டோபர் 2024 3:07:01 PM (IST)

வேப்பலோடை கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் தொடர்பான சமூகத்தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு சமூக தணிக்கை சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் 23 கட்டங்களாக சமூக தணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் 6வது கட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியத்தில் 19 கிராம ஊராட்சிகளில் அக்-15ம் தேதி முதல் அக்.19ம் தேதி வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் கிராம வள பயிற்றுநர்களால் சமூகத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான சமூகத் தணிக்கை அறிக்கை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம்.ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், வேப்பலோடை கிராம ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு கூட்டத் தலைவர் முனியம்மாள் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் வேல்கனி, ஓவர்சீர் அசோக்குமார். ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி செயலர் செந்தில் குருநாதன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தினை ஓட்டப்பிடாரம் சமூகத் தணிக்கை வட்டார வள பயிற்றுனர் முத்து முருகன் வழிநடத்தி சமூக தணிக்கை அறிக்கை தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடல் செய்தார். கூட்டத்தில் சமூகத் தணிக்கை அறிக்கை குறித்த 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் பஞ்.துணைத் தலைவர் சிவஞானசுந்தரி, வார்டு உறுப்பினர்கள் லதா, சிந்தாமணி, முத்துமாரி, கிராம வள பயிற்றுநர்கள் மாரி செல்வி, ஆறுமுககனி, முத்துமணி, பிச்சம்மாள், முத்து முனீஸ்வரி, மீனாட்சி, பணித்தள பொறுப்பாளர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திட்ட ஒருங்கிணைப்பாளர் பொன்ராஜ் நன்றி கூறினார்.இதேபோல் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆதனூர், கீழமங்கலம் உள்பட தூத்துக்குடி மாவட்டத்தில் 19 ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் 100% வெற்றி : எஸ்டிகே ராஜன் அணியினர் பேட்டி
திங்கள் 15, டிசம்பர் 2025 8:04:02 AM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:52:26 AM (IST)

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சுதேசி திருவிழா டிச. 26இல் தொடக்கம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 7:32:18 AM (IST)

திருச்செந்தூரில் 6 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 7:28:04 AM (IST)

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)











Veppalodai.....Oct 20, 2024 - 07:16:14 AM | Posted IP 172.7*****