» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரம் மாற்றம்

செவ்வாய் 24, செப்டம்பர் 2024 8:18:44 AM (IST)

திருச்செந்தூர்-சென்னை இடையேயான செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரம் இன்று மாற்றப்பட்டு உள்ளது.

திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு தினமும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வழக்கமாக திருச்செந்தூரில் இருந்து இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு செல்லும். இந்த நிலையில் திருச்சி மண்டலத்தில் ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டு உள்ளது. அதன்படி இரவு 8.25 மணிக்கு பதிலாக இரவு 10.35 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து

குமார்Sep 25, 2024 - 09:16:31 PM | Posted IP 172.7*****

தென் தமிழகத்தில் இரட்டை ரயில்பாதை வந்தும் கூடுதல் ரயில் சேவை எதுவும் இல்லை. இரயில்வே அதிகாரிகள் தூக்கத்திலிருந்து விழியுங்கள். பொதுமக்களின் நலனில் அக்கறை காட்ட உங்கள்.

ஜெகநாதன் சென்னைSep 25, 2024 - 12:19:09 PM | Posted IP 162.1*****

நடவடிக்கை எடுக்க தென்னக ரயில்வே முன் வரவேண்டும். பகல் நேர இராமேஸ்வரம் _சென்னை தினசரி ரயில் விட வேண்டும்.

செய்யதுஉமர்Sep 25, 2024 - 09:37:45 AM | Posted IP 172.7*****

சென்னையில் இருந்து திருசெந்தூருக்கு ஒரே ஒரு ரயில் சேவை மட்டுமே செயல்படுகிறது எனவே மேலும் ஒரு ரயில் சேவை சென்னை விழுப்புரம் விருத்தாசலம் திருச்சி மதுரை திருநெல்வேலி வழியாக திருசெந்தூருக்கு ரயில் விட வேண்டும் மேலும் முன்னாள் ரயில்வே துறை அமைச்சர் லல்லு பிரசாத் அறிவித்த சென்னை கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் பாண்டிச்சேரி காரைக்கால் பட்டுக்கோட்டை கீழக்கரை ராமநாதபுரம் சாயல்குடி தூத்துக்குடி ஆறுமுகநேரி காயல்பட்டினம் திருசெந்தூர் உடன்குடி திசையன்விளை வழியாக கண்ணியாகுமரிக்கு எப்போது ரயில் சேவை நடைபெறும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital







Thoothukudi Business Directory