» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை பார்வையிட்ட பொதுமக்கள், மாணவர்கள்!
வெள்ளி 6, செப்டம்பர் 2024 8:37:52 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பார்வையிட்டனர்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையத்தில், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 153-வது பிறந்த தினவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. துறைமுக வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனாரின் திருவுருவ சிலைக்கு துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித், மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விழாவில் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய துணைத் தலைவர் மற்றும் தலைமை இயந்திரப் பொறியாளரான வி. சுரேஷ் பாபு, துறைமுக சபை உறுப்பினர்கள், துறைமுக அதிகாரிகள் மற்றும் ஊழியர்ககள் கலந்து கொண்டனர். வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி துறைமுகத்தை நேற்று பார்வையிட துறைமுக ஆணையம் அனுமதி அளித்தது.
இதையடுத்து காலை 9 மணி முதல் பள்ளி, கல்லுரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் வ.உ.சி. துறைமுகத்திற்கு வருகை தந்தனர். மேலும், வெளி மாவட்டங்களில் இருந்தும் சுற்றிப்பார்க்க பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். துறைமுகத்தில் சரக்குகளை இறக்குவதற்காக வந்து நின்ற கப்பல்களை பார்த்து ரசித்தனர். அந்த கப்பல்களின் முன் நின்று தற்படம் எடுத்துக் கொண்டனர். கப்பல்களில் இருந்து சரக்குகள் இறக்கும் பணியைப் பார்வையிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 7:49:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் விருப்ப மனு
புதன் 17, டிசம்பர் 2025 7:42:57 PM (IST)











BalamuruganSep 7, 2024 - 07:18:13 AM | Posted IP 172.7*****