» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 3 புதிய பேருந்துகள் சேவை : கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்

புதன் 21, ஆகஸ்ட் 2024 11:22:52 AM (IST)



தூத்துக்குடியில் 3வழித்தடங்களில் புதிய பேருந்துகள் சேவையை கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்.

நெல்லை போக்குவரத்து மண்டலத்திற்கு புதிதாக 30 பஸ்கள் வந்துள்ளன. இதில் தூத்துக்குடியில் இருந்து திருப்பூருக்கு ஒரு பேருந்தும், கோவில்பட்டியில் இருந்து மதுரைக்கு இரண்டு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்துகளை தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து கனிமொழி எம்பி கொடியசைத்து துவக்கி வைத்தார்

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, நெல்லை மண்டல போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் தசரதன், பொது மேலாளர் பாலசுப்பிரமணியன், கிளை மேலாளர்கள் கார்த்திக், ரமேஷ் சுரேஷ்குமார், தென் மண்டல தொழிற்சங்க பொது மேலாளர் தர்மன், தொழிற்சங்க நிர்வாகிகள் முருகன், காந்தி, சேகரன், மரிய தாஸ், மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண் குமார், மாமன்ற உறுப்பினர்கள் கீதா முருகேசன், சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

ராமகிருஷ்ணன்Dec 9, 1739 - 02:30:00 PM | Posted IP 172.7*****

தூத்துக்குடியில் இருந்து செக்காரக்குடி வழியாக திருநெல்வேலிக்கு போக்குவரத்து செய்து கொகொடுத்தால்பள்ளி கல்லூரி மருத்துவமனை செல்பவர்களுக்கு நல்ல ஒரு வசதியாக இருக்கும்நல்லா இருக்கும்

கணேஷ் கணேஷ்Aug 23, 2024 - 05:59:03 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு ரயில் பாதை அமைக்க முயற்சி செய்ய வேண்டும்

கணேஷ்Aug 23, 2024 - 05:58:09 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு ரயில் பாதை அமைக்க நாடாளுமன்ற உறுப்பினர் முயற்சி செய்ய வேண்டும்

மொக்கைAug 22, 2024 - 07:15:41 PM | Posted IP 172.7*****

புதிய பேருந்து நிலையத்தில் 2 வீலர் பார்க்கிங் எல்லாம் குப்பை கூடாரம் , மலை பெய்தால் சாக்கடை கூடாரம்

பி.கண்ணாAug 22, 2024 - 02:18:30 AM | Posted IP 162.1*****

ஏங்ண்ணா புது பஸ் நிலையம் பாழ்டைந்த பாளைவனம் போல் உள்ளதே எப்போது புதுசா கட்டுமானம் உன்டா அல்ல இதுதான் தலைஎழுத்தா

DavidAug 21, 2024 - 10:21:15 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடி மாவட்டதுக்கு மட்டும் 3 பேருந்தா ஆனால் நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டதுக்கு 27 பேருந்தா நல்ல திரவிட மாடல்

ஆறுமுகம்Aug 21, 2024 - 07:26:07 PM | Posted IP 162.1*****

கோவில்பட்டியிலிருந்து மதுரைக்கு புறப்படும் பேருந்து நேரத்தை குறிப்பிட்டால் சிறப்பு.நன்றி

ஆறுமுகம்Aug 21, 2024 - 07:26:05 PM | Posted IP 172.7*****

கோவில்பட்டியிலிருந்து மதுரைக்கு புறப்படும் பேருந்து நேரத்தை குறிப்பிட்டால் சிறப்பு.நன்றி

ஆறுமுகம்Aug 21, 2024 - 07:26:02 PM | Posted IP 172.7*****

கோவில்பட்டியிலிருந்து மதுரைக்கு புறப்படும் பேருந்து நேரத்தை குறிப்பிட்டால் சிறப்பு.நன்றி

TutianAug 21, 2024 - 03:09:56 PM | Posted IP 162.1*****

Need bus or tain route between Thoothukudi and Thiruvananthapuram

KumarAug 21, 2024 - 12:59:57 PM | Posted IP 162.1*****

👏

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory