» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள்: ஆட்சியர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

வெள்ளி 16, ஆகஸ்ட் 2024 4:30:21 PM (IST)



தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 30 பயனாளிகளுக்கு ரூ.2,58,618 மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக சங்குக் கூட்டரங்கில் இன்று(16.08.2024) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஆட்சியர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக அறிவிக்கும் திட்டங்களின் மூலம் அவர்களது வாழ்வில் புது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தில் உயர்ந்த நிலையையும், சமூக பாதுகாப்பையும் பெற்று வாழ்ந்து வருகிறார்கள்.

மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு, முன்னேற்றத்திற்கு தனியாக துறையை உருவாக்கி, நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை, ரயில் பயண சலுகை, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள், திருமண நிதியுதவி, கல்வி உதவித்தொகை, பராமரிப்பு உதவித்தொகை, சுயதொழில் தொடங்குவதற்கான வங்கிக்கடனுதவி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பான முறையில் சேவை புரிந்தவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மாநில அளவிலான விருதுகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.

அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலனைக் கருத்திற்கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பல்வேறு முகாம்களில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவர்களின் கோரிக்கைகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

அதன் ஒருபகுதியாக இன்றையதினம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டி தர வேண்டி, இலவச வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகை, இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், காதொலிக் கருவி, தையல் இயந்திரம், திறன் பேசி, உதவி உபகரணங்கள் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 48 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, மனுக்கள் மீது தனிகவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகளுக்கு ரூ.46,750 மதிப்பிலான சிறப்பு மடக்கு சக்கர நாற்காலிகள், 3 குழந்தைகளுக்கு ரூ.23,700 மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலிகள், 14 நபர்களுக்கு ரூ.1,58,368 மதிப்பிலான திறன்பேசிகள், 4 நபர்களுக்கு ரூ.11,120 மதிப்பிலான காதொலிக்கருவிகள், 2 நபர்களுக்கு ரூ.18,100 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள்கள் மற்றும் 1 நபருக்கு ரூ.580 மதிப்பிலான எல்போ ஊன்றுக்கோல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும், ஒரு பயனாளிக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெறுவதற்கான ஆணையும் வழங்கப்பட்டது. 

இக்கூட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

H. ThamizharasanFeb 28, 2025 - 01:24:36 PM | Posted IP 172.7*****

நானும் மாற்று திறனாளி B A வரலாறு முடித்திருக்கேன் எனக்கு அரசு வேலை வழங்கி தருமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory