» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.227.33 கோடி மதிப்பீட்டில் புதிய முனையம்: ஆட்சியர் ஆய்வு!

வியாழன் 4, ஜூலை 2024 5:53:59 PM (IST)



தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.227.33 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய முனையம் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் 17341 சதுர மீட்டர் பரப்பளவில் புதிதாக முனையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த புதிய முனையம் தரைத்தளம், நடுத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய வகையில் அமையவுள்ளது. மேலும், விமானப் போக்குவரத்துக் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் அதைச்சார்ந்த அலுவலகக் கட்டிடங்கள், தீயணைப்புத்துறை கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டிடங்களும் கட்டப்பட்டு வருகிறது. தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து விமான நிலைய புதிய முனையத்திற்கு செல்லும் வகையில் 1 கி.மீ. தூரத்திற்கு இணைப்புச் சாலை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

மேலும், புதிய முனையத்தில் புறப்பாடு பகுதியில் 4 வாயில்களும், 21 பயணியர் செக் இன் கவுண்டர்களும், 3 ஏரோ ப்ரிட்ஜ்களும், 2 வருகைக்கான கன்வேயர் பெல்ட்களும், ஒரே நேரத்தில் 5 விமானங்கள் நிறுத்தும் வகையிலான வசதிகள், 500 பயணியர் வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகள், 2 வி.ஐ.பி. அறைகள், லிப்ட் வசதிகள், பயணிகள் அதிகமாக வருகை தரும் நேரங்களில் 1 மணி நேரத்திற்கு 1440 பயணிகளை கையாளக்கூடிய வகையிலான வசதிகள், பயணிகள் வருகை, புறப்பாடு, பயணிகள் காத்திருப்பு அறைகள் போன்ற பகுதிகளில் புதிய அதிநவீன வசதிகளுடன் உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் புதிய முனையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. புதிய முனையம் 4 நட்சத்திர அந்தஸ்து பெற்ற பசுமை கட்டிடமாக அமைக்கப்பட்டு வருகிறது. முனைய கட்டிடங்கள் முழுவதும் சோலார் பொறுத்தப்பட்டுள்ளது. 

தற்போது வரை 76 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு வருகின்ற 2024 அக்டோபர் மாதத்திற்குள் செயல்பாட்டிற்கு வரவுள்ளது. மேலும், புதிய முனையத்தில் ரூ.113.63 கோடி மதிப்பீட்டில் 3115 மீட்டர் நீளத்திற்கு விமான ஓடுதளம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. தற்போது வரை 93 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு மீதமுள்ள பணிகள் இந்த மாதம் இறுதிக்குள் முடிவடையவுள்ளது.

இந்த ஆய்வின்போது தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் ராஜேஷ், முனைய கட்டுமானப் பிரிவுத் தலைவர் பாரி, பொது மேலாளர் (மின்னணுவியல் பிரிவு) வி.எஸ்.கிருஷ்ணன், இணைப் பொது மேலாளர் பிரான்சிஸ் சேவியர் ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

JegatheeswaranJul 5, 2024 - 04:45:38 PM | Posted IP 162.1*****

777777

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education


Arputham Hospital




Thoothukudi Business Directory