» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மேற்கு தொடர்ச்சி மலையே இல்லாமல் போய்விடும் : தூத்துக்குடியில் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி!

வியாழன் 25, ஏப்ரல் 2024 3:48:49 PM (IST)

கனிமவள கடத்தல் காரணமாக இன்னும் சில ஆண்டுகளில் மேற்கு தொடர்ச்சி மலையே இல்லாமல் மண்ணோடு மண்ணாக ஆகிவிடும் என தூத்துக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் கன்னியாகுமாரி நாடாளுமன்ற தொகுதி பிஜேபி வேட்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது "தமிழகத்தில் போதைப் பொருட்கள் புழக்கம் காரணமாக 8கோடி தமிழர்களும் தங்கள் குழந்தைகள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி விடுவார்களோ என அச்சப்பட துவங்கியுள்ளனர். இதற்குக் காரணம் திமுக அரசு தான்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் கனிமவள கடத்தல் காரணமாக இன்னும் சில ஆண்டுகளில் மேற்கு தொடர்ச்சி மலையே இல்லாமல் மண்ணோடு மண்ணாக ஆகிவிடும். இதற்கு  கன்னியாகுமாரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர்தான் காரணம். இரண்டாவது கட்ட தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும். தமிழகத்தில் பிஜேபி கூட்டணி 39 இடங்களிலும் வெற்றி பெறும் என்று தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory