» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் அதிகரிப்பு: இபிஎஸ், ஓபிஎஸ், அண்ணாமலை கண்டனம்

வியாழன் 25, ஏப்ரல் 2024 11:36:20 AM (IST)



தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் அதிகரித் துவிட்டதாகக் கூறி, அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்குரைஞர் வீட்டில் அரிசி கடத்தல் கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர் கெட்ட திமுக ஆட்சியில் ஏற்கெனவே போதைப் புழக்கமும் அது சார்ந்த குற்றங்களும் சர்வசாதாரணம் ஆகிவிட்ட நிலையில், தற்போது வெடிகுண்டு கலாசாரமும் தலைவிரித்தாடுகிறது. 

மேலும், தமிழகத்தில் இருந்து நியாயவிலைக் கடை அரிசி வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவதும் திமுக ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது. வழக்குரைஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய கடத்தல் கும்பல் மீது துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை: கோவில்பட்டி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தும் கும்பல், வழக்குரைஞர் ஒருவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட திமுகவைச் 'சேர்ந்த நபர், கடந்த ஆண்டு ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு ஒன்றில் போலீஸாரால் தேடப்பட்டு வந்தவர். ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்த அனைவரையும் உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓ.பன்னீர்செல்வம்: மணல் கொள்ளை, போதைப் பொருள் கடத்தலைத் தொடர்ந்து, தமிழகத்தில் தற்போது ரேஷன் அரிசி கடத்தல் அதிகரித்துள்ளது. அரிசி கடத்தலுக்கு திமுகவினர் துணை போவது தெரியவந்துள்ளது.தமிழகம் வளர்ச்சி பெற்ற மாநிலமாக விளங்க வேண்டும் என்றால், அரிசி கடத்தலில் ஈடுபட்டு, சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் திமுகவினரை சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory