» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திங்கள் 22, ஏப்ரல் 2024 8:09:22 AM (IST)



விளாத்திகுளம் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் விமரிைசயாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-ம் நாளான 19-ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு மீனாட்சி அம்பிகைக்கு பட்டாபிஷேகம், காலை 6 மணிக்கு அம்மன் பூப்பல்லாக்கில் எழுந்தருளல், மாலை 5 மணிக்கு சிவகாமி அம்பிகா சமேத நடராஜருக்கு அபிஷேகம் நடந்தது. இரவு 8 மணிக்கு மேல் சுவாமி நடராஜர் பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நேற்று முன்தினம் இரவு மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தது.

விழாவின் 10-ம் நாளான நேற்று மாலையில் தேரோட்டம் நடந்தது. இதையொட்டி காலை 10 மணிக்கு சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலை 4 மணிக்கு மேல் தேரோட்டம் தொடங்கியது. தேர் ரதவீதிகளை சுற்றி மாலை 6 மணியளவில் நிலையை வந்தடைந்தது. விழாவில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். தொடர்ந்து சுவாமி, அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. விழாவில், 23-ஆம் தேதி தீர்த்தவாரியும், 24-ஆம் தேதி ஊஞ்சல் வைபவமும் நடக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory