» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி தொகுதியில் 49.38% வாக்குகள் பதிவு!
வெள்ளி 19, ஏப்ரல் 2024 3:58:51 PM (IST)
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் இன்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி 49.38% வாக்குகள் பதிவாகி உள்ளது.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது வருகிறது. காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும்.
தூத்துக்குடி தொகுதியில் பாராளுமன்ற மொத்தம் 1,624 வாக்குச்சாவடிகளில் 14,58,430 வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர். இந்நிலையில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 49.38% வாக்குகள் பதிவாகி உள்ளது.
சட்டமன்ற தொகுதி வாரியாக 3 மணி நிலவரம்
கோவில்பட்டி 49.30%
ஓட்டப்பிடாரம் 46.45%
ஸ்ரீவைகுண்டம் 49.61%
தூத்துக்குடி 46.51%
திருச்செந்தூர் 50.41%
விளாத்திகுளம் 55.32%