» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கார்கள் நேருக்கு நேர் மோதல்: 2½ வயது குழந்தை பரிதாப சாவு

ஞாயிறு 14, ஏப்ரல் 2024 10:57:41 AM (IST)

தென்திருப்பேரை அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறாம் பண்ணையைச் சேர்ந்தவர் சாஜித் ஹமீது (30). இவருடைய மனைவி அனீஸ் பாத்திமா. இவர்களுடைய பெண் குழந்தை மூசினா (2½). இவர்கள் குடும்பத்தோடு நேற்று முன்தினம் மாலை காயல்பட்டினத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தனர். 

காரை சாஜித் ஹமீது ஓட்டினார். காரில் 5 பேர் பயணித்தனர். டிரைவரின் சீட் அருகே அனீஸ் பாத்திமா தனது மகளை மடியில் வைத்திருந்தார். நெல்லை வண்ணார்பேட்டை சாலியர் தெருவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் சதீஷ். இவர் குடும்பத்தோடு திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். 

தென்திருப்பேரை அருகே உள்ள குருகாட்டூர் வரும்போது 2 கார்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் சாஜித் ஹமீது காரின் முன்பக்கம் இருந்த பலூன் வெளியே வந்ததில் குழந்தை மூசினாவுக்கு மட்டும் காயம் ஏற்பட்டது. உடனே அருகில் உள்ள தென்திருப்பேரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை மூசினா நேற்று பரிதாபமாக உயிரிழந்தாள். இந்த விபத்து குறித்து ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2½ வயது குழந்தை இறந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory