» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாக்குப்பதிவு நாளன்று வெப்ப அலை : ஆட்சியர் ஆலோசனை!

வெள்ளி 12, ஏப்ரல் 2024 4:57:34 PM (IST)



தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நாளன்று வெப்ப அலை குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் வாக்குச்சாவடிகளில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், வாக்குப்பதிவு நாளன்று வெப்ப அலை குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கூட்டம் இன்று (12.04.2024) காலை 11.00 மணிக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகள், மூத்தகுடி மக்களுக்கான சக்கர நாற்காலிகள் வழங்கப்படுவது குறித்தும், அனைத்து வாக்குச்சாவடிகளில் போதிய பந்தல் (15x15) மற்றும் சேர், கழிவறை, தண்ணீர் வசதி, மின் விளக்கு, மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும், வாக்குப்பதிவு நாளன்று வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளதால் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ழுசுளு பொருத்தப்பட வேண்டும் எனவும், 

மேலும் மண்டல அலுவலர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அனுப்பப்பட வேண்டிய அறிக்கைகள் குறித்தும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஏ.ழு.ஊ நுபெiநெநச ஊழடடநபந -ல் செய்யப்பட வேண்டிய முன் ஏற்பாடுகள், அடிப்படைய வசதிகள், கணிணி வசதிகள் போன்றவை குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சித் தலைவர் அவர்களால் அறிவுரைகள் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆர்.ஐஸ்வர்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory