» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை திருவிழா ஏப்.14ல் துவக்கம் : 23ம் தேதி தேரோட்டம்!!

வெள்ளி 12, ஏப்ரல் 2024 10:23:38 AM (IST)


தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 23ஆம்  தேதி நடைபெற உள்ளது.

தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள  பிரசித்திபெற்ற, சிவன் கோவில் என்று அழைக்கப்படும் பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். நடப்பாண்டில் சித்திரைத் திருவிழா வருகிற 14ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

கொடியேற்றத்தை முன்னிட்டு அன்றைய தினம் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு,  காலை 7 மணிக்கு கொடிபட்டம் வீதி உலா நடக்கிறது. சங்கர ராமேஸ்வரர், பாகம்பிரியாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். அதைத் தொடர்ந்து மூலஸ்தானம் முன்பு உள்ள கொடிமரத்தில் கலச கும்பங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டு தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க, சிவாச்சாரியர்கள் மந்திரங்கள் ஓத, கொடிமரத்தில் கொடியேற்றப்படும். பின்னர் கொடிமரத்திற்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். 

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 23ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 10.45மணிக்கு மேல் நடைபெற உள்ளது. தேரோட்டத்தில் மேள வாத்தியங்களுடன் பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், உள்ளிட்ட கிராமிய நிகழ்ச்சிகள் நடைபெறும். திருவிழா நாட்களில் துனமும் நாட்டிய நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், பக்தி இன்னிசை என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். சித்திரைத் திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி தமிழ்செல்வி மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 


மக்கள் கருத்து

Namma Ooru thiruvilaApr 12, 2024 - 07:22:12 PM | Posted IP 162.1*****

Thoothukudiyin thiruvila... ithu nammaooru thiruvila....

TamilanApr 12, 2024 - 07:21:28 PM | Posted IP 172.7*****

Om Namashivaya...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory