» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தேர்தல் பாதுகாப்பு பணியாற்ற காவலர்கள் சுழற்சி முறையில் தேர்வு : ஆட்சியர் தகவல்

வியாழன் 11, ஏப்ரல் 2024 9:47:30 PM (IST)

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தேர்தல் பாதுகாப்பு பணியாற்ற காவலர்கள் சுழற்சி முறையில் சட்டமன்றத் தொகுதிவாரியாக பணிபுரிய ஆணை வழங்கப்பட்டது. 

இது குறித்து தூத்துக்குடி பாராளுமன்றத்  தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள காவல் துறை பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆணையத்தின் பிரத்யேக இணையதளத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி, அவர்களால் இன்று (11.04.2024) காலை 11.00 மணியளவில் தேர்தல் பொதுப் பார்வையாளர் திவேஷ் ஷெஹரா,  முன்னிலையில் நடைபெற்றது. 

இதில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக. பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர் (தூத்துக்குடி நகரம்) கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 1050 தலைமைக் காவலர் / காவலர்களில் 948 நபர்களுக்கு சுழற்சி முறையில் சட்டமன்றத் தொகுதிவாரியாக பணிபுரிய ஆணை வழங்கப்பட்டது. இவர்களுக்கு தேர்தல் பணிச் சான்று மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, பிற மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு தபால் வாக்கு மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory