» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பள்ளிவாசலில் அமைச்சர் கீதா ஜீவன் வாக்குசேகரிப்பு!

வியாழன் 11, ஏப்ரல் 2024 4:52:29 PM (IST)



தூத்துக்குடியில் ஜாமியா பள்ளிவாசல் நிர்வாகிகள், உலமாக்கள் சபை நிர்வாகிகள்  மற்றும் இஸ்லாமிய பெரியவர்களை சந்தித்து திமுக வேட்பாளர் கனிமொழிக்கு அமைச்சர் கீதா ஜீவன் ஆதரவு திரட்டினார்.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி போட்டியிடுகிறார் கனிமொழிக்கு ஆதரவாக அமைச்சர் கீதா ஜீவன் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.  இந்நிலையில் இன்று தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசல் வளாகத்தில்  ஜாமியா பள்ளிவாசல் நிர்வாகிகள் உலமாக்கள் சபை நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய சமுதாய பெரியவர்கள் ஆகியோரை சந்தித்து திமுக அரசு இஸ்லாமியர்களுக்கு செய்த சாதனைகள் மற்றும் பாதுகாப்பாக செயல்படுவது ஆகியவற்றை எடுத்துக் கூறி திமுக வேட்பாளர் கனிமொழி மற்றும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டார்.  

அப்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  இந்தியா கூட்டணிக்கு தமிழ்நாடு ஜமாத் உலமா சபை முழு ஆதரவு தெரிவிப்பதாக மாநில ஜமாத் உலமா சபை பொருளாளர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். ஜாமியா பள்ளிவாசல் தலைவர் மீராசா மறைக்கார், செயலாளர் எம்எஸ்எஸ் ரகுமான், துணைத் தலைவர் சிராஜுதீன், பொருளாளர் மூஸா, கிரசன்ட் பள்ளி செயலாளர் முகமது உவைஸ்,   அரபிக் கல்லூரி செயலாளர் அபூபக்கர், பொருளாளர் சையது சுலைமான்,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வணிக பிரிவு அமைப்பாளர் அரபி,  காங்கிரஸ் கட்சி மாநில துணைத்தலைவர் ஏபிசிவி சண்முகம்,  திமுக மாநகர செயலாளர் எஸ்ஆர் ஆனந்த சேகரன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்


மக்கள் கருத்து

கட்டுமரன்Apr 11, 2024 - 10:47:27 PM | Posted IP 172.7*****

அப்படியே திருச்செந்தூர், தூ.டி சிவன் கோவிலுக்கு சென்று வாக்கு சேகரியுங்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory