» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தேர்தல் பணி அலுவலர்கள் ஆலோசனைக்கூட்டம்!

புதன் 27, மார்ச் 2024 5:48:35 PM (IST)



தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பொது தேர்தல் பார்வையாளர் திவேஷ் ஷெஹரா, தலைமையில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையம் 16.03.2024 அன்று பிற்பகல் 03.00 மணியளவில் தேர்தல் அறிவிப்பினை வெளியிட்டதைத் தொடர்ந்து, தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் பணிகள் தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தலைமையில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி பாராளுமன்ற பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. மேலும் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பொது தேர்தல் பார்வையாளர் திவேஷ் ஷெஹரா, தலைமையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் செலவின பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் இன்று (27.03.2024) நடைபெற்றது. பின்னர் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பொது தேர்தல் பார்வையாளர் திவேஷ் ஷெஹரா, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக அறையினை பார்வையிட்டார்.

கூட்டத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஸ்ரீஜூ, அஜய் ரூமல் கர்டே, வாக்காளர் பதிவு அலுவலர் / தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆர்.ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய்சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜகுரு மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory