» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தாலூகா அலுவலகத்தில் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி பெண் போராட்டம்!

புதன் 27, மார்ச் 2024 5:40:28 PM (IST)



கோவில்பட்டியில் நீதிமன்ற உத்தரவினை மீறி நில அளவை பிரிவினர்  செயல்படுவதாக குற்றஞ்சாட்டி தாலூகா அலுவலகத்தில் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்மணியால் பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மில் தெரு பகுதியை சேர்ந்தவர் லெட்சுமி. இவருக்கும் சௌந்தர் என்பவருக்கும் இடையே இலுப்பையூரணி ஊராட்சியில் உள்ள ஒரு நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கும் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் கோவில்பட்டி தாலூகா  அலுவலகத்தில் உள்ள  நில அளவை பிரிவினர் நீதிமன்றத்தில் வழக்கும் இருக்கும் நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவினை மீறி ஒரு சார்பாக செயல்பட்டு வருவதாக கூறி லெட்சுமி தாலூகா அலுவலகத்தில் உள்ள நில அளவை பிரிவு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 

பணத்தினை வாங்கி கொண்டு அதிகாரிகள் ஒரு சார்பாக செயல்பட்டு வருவதாகவும், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது  அளவீடு செய்ய முயற்சி செய்து வருவதாகவும் தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டார். இதையெடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட லெட்சுமியுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்;. இது குறித்து இரு தரப்பினரையும் அழைத்து பேசி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் , அது வரை எவ்வித அளவீடும் நடைபெறாது என்று உறுதியளித்தை தொடர்ந்து லெட்சுமி போராட்டத்தினை கைவிட்டார். இதனால் தாலூகா அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory