» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் புத்தக விற்பனை துவக்கம்

புதன் 27, மார்ச் 2024 5:36:01 PM (IST)




கோவில்பட்டியில்  உலக புத்தக தினத்தை முன்னிட்டு காந்தி மண்டபத்தில் புத்தக விற்பனை துவங்கியுள்ளது.

தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம், ரோட்டரி கிளப் ஆப் கோவில்பட்டி, கோவில்பட்டி ஜேசிஐ சார்பில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் மார்ச் 27 முதல் ஏப்ரல்10ம் தேதி வரை நடைபெற உள்ள புத்தக விற்பனையில் தமிழ் இலக்கியம், போட்டி தேர்வு நூல்கள், நாவல், சிறுகதை, வாழ்க்கை வரலாறு, அறிவியல், உள்ளிட்ட 10 ஆயிரம் தலைப்புகளில் 1 லட்சம் புத்தகங்கள் உள்ளன.

இதில் அனைத்து புத்தகங்களுக்கும் 10%தள்ளுபடி உண்டு. துவக்க நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ஜேசிஐ தலைவர் வெங்கடேஷ் தலைமை வகித்தார்.தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க தலைவர் ரவிவர்மா,பாரதியார் அறக்கட்டளை தலைவர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க செயலாளர் கார்த்திக் அனைவரையும் வரவேற்றார்.

புத்தக விற்பனை அரங்குகளை ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் முத்துச்செல்வம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து புத்தக விற்பனை அரங்குகளை பார்வையிட்டார் முதல் விற்பனையை ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர் ஆசியா பார்ம்ஸ் பாபு துவக்கி வைக்க ரவிமாணிக்கம் பெற்றுக் கொண்டார். இதில் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் வீராசாமி,ஜேசிஐ நிர்வாகிகள் ரகுபதி, தினேஷ் பாபு,வர்ஷன், தீபன்ராஜ், சூர்யா, ஸ்டீபன்நரேஷ். உள்பட பலர் கலந்து கொண்டனர்.தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory