» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வாகன சோதனையில் ரூ.2 லட்சம் பறிமுதல் : பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை!

செவ்வாய் 26, மார்ச் 2024 8:02:23 AM (IST)

தூத்துக்குடியில் ஆவணம் இன்றி 2 கார்களில் கொண்டு  செல்லப்பட்ட ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்து 650 ரொக்கப்பணத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் ெசய்தனர்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. அதன்படி தொகுதி முழுவதும் பொது இடங்களில் வரையப்பட்டு இருந்த 596 சுவர் விளம்பரங்கள், 3 ஆயிரத்து 510 சுவரொட்டிகள், 453 விளம்பர பதாகைகள், 504 இதர விளம்பரங்கள் அகற்றப்பட்டன. தனியார் இடங்களில் உள்ள 330 சுவர் விளம்பரங்கள், 1545 சுவரொட்டிகள், 219 விளம்பர பதாகைகள், 214 இதர விளம்பரங்கள் அகற்றப்பட்டன.

அதே போன்று இந்த தேர்தல் விதிமுறைகளை கண்காணிப்பதற்காக பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் விதிமுறை மீறி பணம், பரிசு பொருட்கள் கொண்டு சென்றால் பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.7 லட்சத்து 86 ஆயிரத்து 750 ரொக்கப்பணம் மற்றும் ரூ.20 ஆயிரத்து 244 மதிப்புள்ள மதுபானம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள 20 லேப்டாப், ரூ.27 ஆயிரம் மதிப்புள்ள 250 ஹாட்பாக்ஸ் ஆக மொத்தம் ரூ.15 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பிலான பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

நேற்று தூத்துக்குடி தெர்மல்நகர் பகுதியில் பறக்கும் படை அதிகாரி பாலமுருகன் தலைமையிலான குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு வரப்பட்ட ரூ.1 லட்சத்து 57 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போன்று இன்னாசியார்புரம் பகுதியில் பறக்கும் படை அதிகாரி முருகன் தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது ஒரு காரில் வந்தவர் உரிய ஆவணம் இன்றி வைத்து இருந்த ரூ.78 ஆயிரத்து 650 ரொக்கப்பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்து 650 ரொக்கப்பணத்தை தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory