» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி வேட்பு மனு தாக்கல்

திங்கள் 25, மார்ச் 2024 12:46:02 PM (IST)



தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்  ஆர் சிவசாமி வேலுமணி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

முன்னதாக அவர், தூத்துக்குடி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இருந்து மாவட்ட செயலாளர்கள் முன்னாள் அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் கடம்பூர் ராஜ் ஆகியோர் தலைமையில் புறப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  வந்தனர். அங்கு மாவட்ட ஆட்சித் தலைவரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான லட்சுமிபதியிடம் அதிமுக வேட்பாளர் சிவகாமி வேலுமணி  தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக அவரது மனைவி ஆனந்தி பிரபா தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 

இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி வழக்கறிஞர் தியாகராஜ் நட்டர்ஜி, முன்னாள் எம்எல்ஏக்கள் சின்னப்பன், மோகன், முன்னாள் மாவட்ட செயலாளர் இரா ஹென்றி, தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் பெருமாள், மாநகராட்சி கொறடா வழக்கறிஞர் மந்திரமூர்த்தி, அம்மா பேரவை இணை செயலாளர் திருச்சிற்றம்பலம், வழக்கறிஞர் சரவண பெருமாள் உட்பட பலர் கலந்து காெண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory