» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி தொகுதி தமாகா வேட்பாளராக எஸ்.டி.ஆா்.விஜயசீலன் அறிவிப்பு

ஞாயிறு 24, மார்ச் 2024 10:17:46 AM (IST)

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் தமாகா வேட்பாளராக எஸ்டிஆர் விஜயசீலன் அறிவிக்கப்பட்டுள்ளார். 

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணில் தூத்துக்குடி தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவா் எஸ்.டி.ஆா். விஜயசீலன் (52) வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதாக தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிவித்துள்ளார்.  இவர் ஏற்கனவே 2021 சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். 


த.மா.கா. வேட்பாளர் பயோடேட்டா

பெயா்: எஸ்.டி.ஆா்.விஜயசீலன்

பெற்றோா்: எஸ். தா்மராஜ் - சொா்ணமணி

பிறந்த தேதி, வயது: 25-6-1972 (52)

படிப்பு: பி.எஸ்ஸி.,

தொழில்: அரசியல்,

கல்விப் பணி, விவசாயம்.

கட்சிப் பதவி: தமிழ் மாநில காங்கிரஸ் தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவா்

முந்தைய தோ்தல்கள்: 2021 பேரவைத் தோ்தலில் தோல்வி


மக்கள் கருத்து

அட கோமாளிMar 25, 2024 - 12:31:14 PM | Posted IP 172.7*****

அந்த பய ஏசி ல ஒக்கர்ந்துட்டு எப்படிடா விவசாயம் பண்ணுனாரு? உருட்டா இருக்கே

சொல்லியே ஆகனும்Mar 25, 2024 - 09:08:14 AM | Posted IP 162.1*****

ஏதே இவரு விவசாயம் பண்றாரா 😅 அடேய் 🤣

TamilanMar 24, 2024 - 06:09:43 PM | Posted IP 162.1*****

vetrivaipulla balamaana vetpaalarai niruthiirukalam....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory