» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வளர்பிறை பிரதோஷம்: திரளான பக்தர்கள் வழிபாடு!

சனி 23, மார்ச் 2024 5:45:51 PM (IST)



விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத வளர்பிறை பிரதோஷம் சிறப்பு பூஜைகள் வெகு விமர்சையாக நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில்  பங்குனி மாத வளர்பிறை பிரதோஷத்தில், நந்தியம் பெருமானுக்கு 40 லிட்டர் பால் மற்றும் தயிர், இளநீர், சந்தனம், திருநீறு, மஞ்சள் உள்ளிட்ட பலவகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, ரூ.20 பணத்தாள்களைக் கொண்ட பெரிய பணமாலை உட்பட எலுமிச்சை, தாமரைப்பூ, அருகம்புல், மாவிலை, எருக்கம் பூ, மஞ்சள், வில்வ இலை,  உள்ளிட்ட பல வகையான மாலைகளால் நன்கு அலங்கரிக்கப்பட்டப்பின் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. 

இதில் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து சென்றனர். மேலும் கோவிலுக்கு வந்த பத்தர்கள் அனைவருக்கும் 3 வகையான சாதங்கள், அண்ணாச்சிப்பழம், செவ்வாழை, தேங்காய் உள்ளிட்ட பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.


மக்கள் கருத்து

நித்யாMar 24, 2024 - 01:34:04 PM | Posted IP 172.7*****

கோவில் வாசலில் அலங்காரம் பிரமாதமாக இருந்தது சுந்தரேஸ்வரர் கருவரை மீனாட்சியம்மன் கருவறை அலங்காரம் பிரமாதமாக இருந்தது ஆனால் அவர்களை சுற்றியுள்ள சுற்றுப் பிரகார தெய்வங்களான பிள்ளையார்கோ சீனிவாச பெருமாளுக்கோ மற்றும் பிற சுற்றுப் பிரகார தெய்வங்களுக்கு ஒரு நல்ல மாலை கூட அணியவில்லை ஒரு வாரத்திற்கு முன்பு அணியப்பட்ட காய்ந்த மாலை தான் இருந்தது அவர்களுக்கும் நல்ல மாலை அணிவித்து இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory