» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிரதமர் மோடியை ஆபாசமாக பேசிய அமைச்சர் : தேர்தல் அலுவலரிடம் பாஜக புகார்!!

சனி 23, மார்ச் 2024 5:01:56 PM (IST)

தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடியை ஆபாசமாக விமர்சித்ததாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது மாவட்ட தேர்தல் அலுவலரிடம் பாஜக புகார் அளித்துள்ளது. 

இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ஆர்.சித்ராங்கதன் தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில், தூத்துக்குடி மாவட்டம் திருசெந்தூர் அருகே உள்ள தன்டுபத்து கிராமத்தில் இந்தியா கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் 22.03.2024 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. மேடையில் திமுக பாராளுமன்ற வேட்பாளர் கனிமொழி தலைமை வகித்தார். 

இதில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை "தாயோழி” மோடி என்று அருவருக்கத்தக்க, இழிவான, அசிங்கமான சொற்களால் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை விமர்ச்சித்தது தங்களுக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

மேலும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கர்மவீரர் காமராஜர் என்று புகழாரம் சூட்டி கூட்டத்தில் பெருமிதம் கொண்டார். ஆனால் அதை விமர்சித்து தண்டுப்பத்து கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் அவ்வாறு காமராஜரைப் பற்றி பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு எந்த அருகதையும் இல்லை என்று மோசமாக விமர்ச்சித்துள்ளார். 

அமைச்சர் என்ற பொறுப்பில் உள்ளவரே இதுபோன்ற நான்காம் தர வார்த்தைகளை பயன்படுத்துவது திமுகவுக்கு ஒருபோதும் புகழைத் தேடித் தராது. ஆகையால் இதுபோன்ற வார்த்தைகளால் எதிர்க்கட்சியினரை விமர்சிப்பது தேர்தல் விதிமுறைகளின் படி குற்றமும் ஆகும். இதுபோன்று செயல்களில் ஈடுபடும் அமைச்சர் மற்றும் பொறுப்பில் உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

தமிழன்Mar 25, 2024 - 09:10:11 AM | Posted IP 162.1*****

அப்படி பாத்தா அந்த அண்ணாமலைய எப்போவோ உங்க சாங்கி கட்சில இருந்து தூக்கிருக்கணும்.

TamilanMar 24, 2024 - 06:23:28 PM | Posted IP 172.7*****

மிகவும் கண்டிக்கத்தக்க வார்த்தை ... அமைச்சராக இருந்துகொண்டு இதுபோன்று பேசுவதை அழகில்லை, தேர்தல் ஆணையம் சட்டப்படியான நடவடிக்கையை உடனடியாக எடுக்கவேண்டும்

உண்மைMar 23, 2024 - 10:06:40 PM | Posted IP 172.7*****

அந்த குற்றவாளியை தூக்கி உள்ளே போடுங்கள்

UnmaiMar 23, 2024 - 07:19:53 PM | Posted IP 172.7*****

அவர் சொன்னதை விட நீங்கள் மிக சரியான உசசரிப்போடு சொல்லுகிறீர்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory