» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிரதமரின் சூரிய இல்லம் இலவச மின்சார திட்டம் : தபால் அலுவலகம் மூலம் பதிவு செய்யலாம்!

வியாழன் 29, பிப்ரவரி 2024 11:25:52 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதம மந்திரி சூரிய இல்லம் இலவச மின்சார திட்டத்திற்கு தபால் அலுவலகம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் மு. பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "வீடுகளில் சூரிய மின்சக்தியை ஊக்குவிக்கும் வகையில் 'பிரதமரின் சூரிய வீடு’ என்ற பெயரில் இலவச மின்சார திட்டம் ரூ.75,000 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி வீட்டின் கூரையில் சோலார் பேனல்களை பொருத்திக் கொள்ளும் வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

தற்போது வீடுகளின் மேற்கூரையில் சோலார் பேனல்கள் பொருத்துவதற்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. அரசு மானியம் தருவதால் பல வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இப்போது மேற்கூரையில் சோலார் பேனல்களை பொருத்துகின்றன. இந்த நிலையில் தான் வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் வகையில், வீட்டின் கூரையில் சூரிய மின்சக்தி தகடு பொருத்தும் திட்டம் செயல்படுத்தப்படஉள்ளது.

மத்திய அரசின் இந்த திட்டப்படி குடியிருப்பு வீடுகளுக்கு 1 கிலோவாட் முதல் 2 கிலோவாட் வரை திறன் உள்ள சோலார் பேனல்கள் பொருத்த ரூ.30,000 மானியம் வழங்கப்பட உள்ளது. கூடுதல் திறன் கொண்ட சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்துவோருக்கு, கிலோ வாட் ஒன்றுக்கு ரூ.18,000 வீதமும், 3 கிலோவாட் வரை மொத்தம் ரூ.78,000 மானியம் வழங்கப்பட உள்ளது. 3 கிலோ வாட் திறனுக்கு அதிகமான அளவில் சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்துவோருக்கு உச்சவரம்பாக ரூ.78,000 மானியம் வழங்கப்பட உள்ளது.

இந்திட்டத்தில் இணைந்து பயன்பெற விரும்புவோர் தங்கள் தொலைபேசிஎண், மின் இணைப்பு எண், மின்னஞ்சல் முகவரி, வீட்டு மேற்க்கூரையின் புகைப்படம் உள்ளிட்ட சில தகவல்களை பிரதம மந்திரி – சூரிய இல்லம் என்ற செயலி மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கு ஏதுவாக  தபால் துறை மூலம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் பதிவு செய்யவிரும்புவோர் தங்கள் பகுதி தபால்காரர் அல்லது தபால் அலுவலகத்தை உடனே தொடர்பு கொள்ளலாம். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு கடைசி தேதியாக 8.3.2024ம் தேதி என்று  தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

இ. நாகநாதன்Mar 7, 2024 - 10:06:37 AM | Posted IP 172.7*****

இது உண்மை தானா

சிக்கந்தர்பாட்சாMar 6, 2024 - 08:50:31 PM | Posted IP 172.7*****

வீடு கட்ட ஒழுங்காக பணத்தை கொடுங்கடா அப்புறம் இந்த சூரிய மின்சாரத்தை பற்றி வடை சுடுங்கடா

SivakumarMar 6, 2024 - 11:59:05 AM | Posted IP 172.7*****

Goodchance

அ.சண்முகம் ஆத்தூர் சேலம்Mar 5, 2024 - 04:27:17 PM | Posted IP 172.7*****

மக்கள் அனைவரும் பயன்பெரும் நல்ல திட்டம் ஜோதிஜி அவர்களுக்கு நன்றி சற்று மார்ச் மாதம் முடிய கால அவகாசம் தேவை. நன்றி

Ajith kumarMar 5, 2024 - 01:02:18 PM | Posted IP 172.7*****

முதன் முதலாய் வீடு வாங்கியவர்கள் 2 லட்சம் பேங்க் லோனில் கிடைக்க பெற்றோர், அது போல் இதுவும் மிகவும் பயனுள்ள திட்டம்.15 லட்சம் வரவு வைக்கும் அளவுக்கு பணம் உள்ளதாக கூறியதை திரித்து கூறுபவர்களை புறக்கணித்து நல்ல திட்டங்களை வெற்றி பெற செய்வோம்

Rathinasami.kMar 5, 2024 - 12:46:42 PM | Posted IP 172.7*****

நல்ல திட்டம் கடன் வழங்கும் திட்டம்

உன்னிகிருஷ்ணன்Mar 5, 2024 - 10:04:24 AM | Posted IP 172.7*****

இன்னும் கொஞ்சம் காலவகாசம் தரலாமே 8ஆம் தேதி என்பது மிகக்குறந்த காலம்

Ramalingam MuthusamyMar 5, 2024 - 09:58:41 AM | Posted IP 172.7*****

REALLY THE BEST SCHEME IF IT IS GET INTO, BUT IF IT MAY BE GET INTO JUMLA AFTER ELECTION 2024, LIKE 15 LACKS INTO EVERY INDIAN BANK ACCOUNT, NEITHER RETURN FROM FOREIGN BANKS & CREDITED INTO EVERY INDIAN BANK ACCOUNTS, AND AS USUAL 2 CRORE EMPLOYMENT ON EACH & EVERY YEAR, AS SINCE FROM 10 YEARS NO ANY PROGRESS TILL NOW, RREAT AS JUMLA, TOTALLY IT IS ALSO REVEALED ONLY ELECTION JUMLA AS USUAL, AS TREATING ONLY INDIANS ARE FOOLS. IF THE PROGRAM GET INTO ACTION THEN WE WILL PRAISE OUR PM.

செல்விசேகர்Mar 4, 2024 - 11:15:45 PM | Posted IP 172.7*****

Best scheme super

செல்விசேகர்Mar 4, 2024 - 11:13:42 PM | Posted IP 172.7*****

Best schem super

Selvi SekarMar 4, 2024 - 11:07:31 PM | Posted IP 172.7*****

Best scheme super

செல்விசேகர்Mar 4, 2024 - 11:04:09 PM | Posted IP 172.7*****

Best schem super

S KRISHNANMar 4, 2024 - 07:33:30 PM | Posted IP 172.7*****

இப்போது உள்ள நிலையில்.இத்திட்டம் மிகவும் ம் மக்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி வணக்கம்

K.saravananMar 4, 2024 - 05:15:05 PM | Posted IP 172.7*****

We interested for solar power how to apply plse call me

ராசி.கணேசன்Mar 4, 2024 - 04:34:55 PM | Posted IP 172.7*****

அனைவரும் பயன்பெறும் அற்புதமான திட்டம் மத்திய (ஒன்றிய) அரசிற்கு நன்றி 🙏

சிவக்குமார் தர்மபுரி பேகாரஹள்ளிMar 4, 2024 - 01:57:34 PM | Posted IP 172.7*****

இந்த திட்டம் நாட்டிற்கும் வீட்டிற்கும் பொருளாதார ரீதியில் நன்மை கு

KpadmanabanMar 4, 2024 - 11:11:04 AM | Posted IP 172.7*****

How can I get the details update

JacksonMar 4, 2024 - 10:26:24 AM | Posted IP 172.7*****

S

VinothMar 4, 2024 - 08:13:54 AM | Posted IP 172.7*****

Super

Mohamed riyazMar 3, 2024 - 09:55:56 PM | Posted IP 172.7*****

மிக்க வரவேயிக்க வேண்டும் மக்களுக்கு மிகுந்த பயேனுள்ள தாக இருக்கும்

செந்தில் குமார் சேMar 3, 2024 - 03:51:17 PM | Posted IP 172.7*****

அருமையான பதிவு

M.manicuddaloreMar 3, 2024 - 01:48:52 PM | Posted IP 172.7*****

Good

RamasamyMar 3, 2024 - 10:13:34 AM | Posted IP 172.7*****

Best scheme for our Indian people. We thanks for our PM., Modhi ji

AlagumuruganMar 3, 2024 - 10:08:18 AM | Posted IP 172.7*****

Super🌹🌹🌹🌹🌹🌹

AlagumuruganMar 3, 2024 - 10:07:38 AM | Posted IP 172.7*****

💪super🌹🌹

சாதிக்Mar 3, 2024 - 09:35:55 AM | Posted IP 172.7*****

இந்த சூரிய மின்சாரம் அமைக்க எவ்வளவு செலவாகும்

Govarthanan ShanmugamMar 3, 2024 - 09:34:14 AM | Posted IP 172.7*****

This scheme is more helpful for middle class people.

Jeyabal velusamyMar 3, 2024 - 08:50:24 AM | Posted IP 172.7*****

Good

EshwaranMar 3, 2024 - 08:41:32 AM | Posted IP 172.7*****

My house new connection solar u come to my house free solar

P.marimuthuMar 3, 2024 - 07:56:28 AM | Posted IP 172.7*****

Bestschme

Ansalomin RajaMar 2, 2024 - 09:46:58 PM | Posted IP 172.7*****

We required solar system

M. RAMALINGAMMar 2, 2024 - 09:21:23 PM | Posted IP 172.7*****

Hai

Panneer SelvamMar 2, 2024 - 03:08:10 PM | Posted IP 172.7*****

மிகச் சிறப்பு.

S.selvaprasanthMar 2, 2024 - 07:47:55 AM | Posted IP 172.7*****

அதிகமான மின்சாரம்கட்டனம் அதிகமாகிரது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital



CSC Computer Education






Thoothukudi Business Directory