» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்ட அமமுக மறு சீரமைப்பு : டிடிவி தினகரன் அறிக்கை
புதன் 24, ஜனவரி 2024 4:51:26 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் "தூத்துக்குடி மாநகர்" மற்றும் "தூத்துக்குடி புறநகர்" என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தலைமைக் கழகத்தால் நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தூத்துக்குடி மாநகர், தூத்துக்குடி வடக்கு மற்றும் தூத்துக்குடி தெற்கு என கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் தூத்துக்குடி மாவட்டத்தின் நிர்வாக வசதிகளுக்காக "தூத்துக்குடி மாநகர்" மற்றும் "தூத்துக்குடி புறநகர்" என இரண்டு கழக மாவட்டங்களாக மறுசீரமைக்கப்பட்டு, அதற்குண்டான சட்டமன்றத் தொகுதிகளைக் கீழ்காணுமாறு உள்ளடக்கி செயல்படும்.தூத்துக்குடி மாநகர் மாவட்டம்: 1. தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி, 2. விளாத்திக்குளம் சட்டமன்றத் தொகுதி, 3. கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி ஆகிய தொகுதிகளும், தூத்துக்குடி புறநகர் மாவட்டத்தில் 1. திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி, 2. ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத்தொகுதி, 3. ஓட்டப்பிடாரம் சட்டமன்றத்தொகுதி ஆகிய தொகுதிகளும் இடம்பெறும்.
தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளராக T.விர்ஜின் ஆரோக்கிய பிரைட்டர், (தூத்துக்குடி மாநகர் மாவட்டக் கழக செயலாளர்) தூத்துக்குடி புறநகர் மாவட்ட கழக செயலாளராக பா.ஜானியேல் சாலமோன் மணிராஜ் (கழக மாணவர் அணி இணைச்செயலாளர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
இதுவரை மாணவர் அணி இணைச்செயலாளர் பொறுப்பிலிருக்கும் பா.ஜானியேல் சாலமோன் மணிராஜ் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். மேலும்,தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழக செயலாளர் பொறுப்பிலிருக்கும் சிவபெருமாள், தூத்துக்குடி தெற்கு மாவட்டக் செயலாளர் பொறுப்பிலிருக்கும் மனோகரன் ஆகியோர் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள். கழக அமைப்பு செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயலாற்றுவார்கள்.
கழக அமைப்பு ரீதியாக தற்போது மறுசீரமைக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், சம்மந்தப்பட்ட மாவட்ட கழக செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கழக பணிகளை ஆற்றிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். கழகம் மற்றும் சார்பு அமைப்புகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும் வரை, தற்போதுள்ள நிர்வாகிகள் சம்மந்தப்பட்ட மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகப் பொறுப்பில் தொடர்ந்து செயலாற்றுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் மீது கார் மோதியதில் எலெக்ட்ரிசியன் பலி: தூத்துக்குடியில் பரிதாபம்!!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:39:17 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது - மேலும் மூவருக்கு வலைவீச்சு!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:26:04 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)










