» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விஜயகாந்த் நலமுடன் இருந்திருந்தால் தமிழக அரசியல் போக்கே மாறியிருக்கும்: சீமான் பேட்டி

வெள்ளி 29, டிசம்பர் 2023 12:52:24 PM (IST)

விஜயகாந்த் நலமுடன் இருந்திருந்தால் தமிழக அரசியல் போக்கே மாறியிருக்கும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். 

தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், விஜயகாந்த் என்றாலே அச்சமின்மை, துணிச்சல். எதற்கும் பயப்படாதவர். தவசி படத்தில் பணியாற்றும்போதுதான் அவரோடு மனம்விட்டு பேசுகிற வாய்ப்பு கிடைத்தது. அப்போதில் இருந்து தான் நெருக்கமான பழக்கம்.  அவரைப்போன்ற சிறந்த மனிதர் கிடைப்பது அரிது. 

அவரை போன்று நடிப்பதற்கு ஆட்கள் வரலாம், சண்டை போடுவதற்கு கூட ஒருவர் வரலாம். ஆனால், அவரைப்போல சிறந்த மனிதர் ஒருவர் வருவது ரொம்ப கடினம். திரையில் இருந்துகொண்டு புகழின் உச்சியில் இருந்தபோதும் அதை தலையில் ஏற்றிக்கொள்ளமால் பார்த்துக் கொண்டவர் விஜயகாந்த்.  

அனைவரோடும் சமமாக பழகக்கூடியவர். அப்படியொரு மனிதர் திரையுலகில் இருந்தார் என்றால் அவர் விஜயகாந்த் மட்டுமே. அவரை இழந்திருப்பது என்பது மிகுந்த கவலையாக உள்ளது. ஜெயலலிதா, கருணாநிதி போன்ற பெரிய அரசியல் ஆளுமைகள் இருக்கும்போதே அரசியலுக்கு வந்து 10.5 சதவிகித வாக்குகள் வாங்கி எதிர்க்கட்சித் தலைவராகி திராவிடத்தை தனது பேச்சால் மிரள வைத்து மாமனிதனாக வந்தார் என்பது சாதாரண விஷயம் அல்ல. 

இவ்வளவு நாள் விஜயகாந்த் நலமுடன் இருந்திருந்தால் தமிழக அரசியல் போக்கே மாறியிருக்கும். அவர் ஒரு ஆகச் சிறந்த மனிதர், எளிமையாளர், பண்பாளர்.  விஜயகாந்தை பேச பழகுவதில் ஒரு குழந்தை, கம்பீரமும், கருணையும் கொண்டவர் என சீமான் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education


Arputham Hospital



Thoothukudi Business Directory