» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பால் வியாபாரி கொலை வழக்கில் 2பேர் கைது : பரபரப்பு வாக்குமூலம்

சனி 2, டிசம்பர் 2023 11:07:02 AM (IST)

தூத்துக்குடியில் பால் வியாபாரி கொலை வழக்கில் 2பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி பண்டாரம் பட்டி மேல தெருவை சேர்ந்தவர் நந்தகுமார் (27), பால் வியாபாரம் செய்து வந்தார். நேற்று காலை 11 மணியளவில் வியாபாரத்தை முடித்து விட்டு தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மீளவிட்டான் ரோடு, பண்டாரம்பட்டி விலக்கு ரோட்டில் வந்தபோது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். 

இதுகுறித்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியைச் சேர்ந்த இசக்கி பாண்டியன் மகன் விக்கி (எ) விக்னேஷ்வரன் (36), கே.வி.கே., நகரைச் சேர்ந்த திருமணி மகன் மாரிமுத்து (46) ஆகிய 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீசாரிடம் விக்கி (எ) விக்னேஷ்வரன் (36) அளித்த வாக்குமூலத்தில் அவர் கொலை செய்யப்பட்ட நந்தகுமாரிடம் தான் ரூ.2.5லட்சம் கடன் வாங்கியதாகவும், அதனை திருப்பி கொடுக்காததால் வட்டியுடன் சேர்த்து ரூ.4.5 லட்சம் கேட்டு மிரட்டியதால் அவரை நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிக் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். இந்த கொலையில் மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து

மக்கள்Dec 2, 2023 - 11:20:04 AM | Posted IP 162.1*****

பழைய vao கொலை குற்றவாளிகளை தூக்குல போடாமல் ஆயுட்தனனை கொடுத்த முட்டாள் வழக்கறிஞர்கள், 1 கோடி கொடுத்த அரசியல்வாதிகள்களால் சட்டம் செத்துவிட்டது. கொலைக்குற்றவாளிகளை தூக்கில் போட்டால்தான் சரியான தீர்வு.

மக்கள்Dec 2, 2023 - 11:12:20 AM | Posted IP 162.1*****

குற்றவாளிகளை தூக்கில் போட்டால்தான் அடுத்த கொலைகள் நடக்க வாய்ப்பு குறையும்..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory