» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து வாலிபர் பலி

வியாழன் 30, நவம்பர் 2023 10:56:10 AM (IST)

உடன்குடி அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து படுகாயம் அடைந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி புதுமனை சுல்தான்புரத்தில் வசித்து வருபவர் பொன்ராஜ் மகன் ஜான் சுந்தர் என்ற கெர்மன் (31). இவர் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தார். தற்போது மழை காலம் என்பதால் வேலை மிகவும் குறைவாக இருந்ததால் உடன்குடி செட்டியாபத்தில் ஒரு பழைய கட்டிடத்தில் பொருட்களை இடித்து எடுப்பதற்காக கூலி வேலைக்கு சென்றுள்ளார்.

நேற்று வேலையை முடித்து விட்டு மாலையில் வீடு திரும்பும்போது வீட்டில் உள்ள மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் கெர்மன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்து குலசேகரன்பட்டினம் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த கெர்மனுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்று பியூலா என்ற மனைவி உள்ளார். அவர் தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.  மேற்கூரை இடிந்து விழுந்து வாலிபர்  உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital

Thoothukudi Business Directory