» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசு பள்ளியில் லேப்டாப்கள், டிவி திருட்டு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
புதன் 29, நவம்பர் 2023 3:31:56 PM (IST)

எட்டயபுரம் அருகே அரசு பள்ளியில் லேப்டாப்கள், டிவி உள்ளிட்ட பொருட்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே வெம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை ஆசிரியர்கள் திறக்க வந்தபோது பள்ளியின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் தலைமை ஆசிரியர் அறை, ஆசிரியர்கள் அறை, வகுப்பறை என 4 அறைகளில் பூட்டை உடைத்து அங்கிருந்த 2 லேப்டாப், 43 இன்ச் டிவி உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
மேலும் கொள்ளையர்கள் 2 பீரோவை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தலைமை ஆசிரியர் ராஜா சண்முகநாதன் அளித்த புகாரின் பேரில் மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த 2012 ஆம் ஆண்டு கணினிகள் திருடுபோய் குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் 100% வெற்றி : எஸ்டிகே ராஜன் அணியினர் பேட்டி
திங்கள் 15, டிசம்பர் 2025 8:04:02 AM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:52:26 AM (IST)

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சுதேசி திருவிழா டிச. 26இல் தொடக்கம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 7:32:18 AM (IST)

திருச்செந்தூரில் 6 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 7:28:04 AM (IST)

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)










