» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாய்கள் கடித்து பெண் புள்ளிமான் உயிரிழப்பு
செவ்வாய் 28, நவம்பர் 2023 8:03:58 AM (IST)
தூத்துக்குடி அருகே நாய்கள் கடித்ததில் புள்ளிமான் உயிரிழந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே ஆரைக்குளம் மலை, கீழமுடிமண், வெள்ளாரம் பகுதிகளைச் சுற்றியுள்ள காடுகளில் ஏராளமான புள்ளிமான்கள் உள்ளன. அவை இரை, தண்ணீா் தேடி அவ்வப்போது குடியிருப்புப் பகு திகளுக்குள் வருகின்றன. இந்நிலையில், நேற்று ஜெகவீரபாண்டியபுரம் பகுதியில் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையோரம் காயங்களுடன் புள்ளிமான் இறந்து கிடப்பதாக, அப்பகுதியினா் ஓட்டப்பிடாரம் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில், வனச் சரக அலுவலா் சுப்பிரமணியன் தலைமையில் வனவா் மகேஷ், வனக் காப்பாளா் பேச்சிமுத்து, வனக் காவலா் லட்சுமணன் ஆகியோா் சென்று, புள்ளிமான் சடலத்தை மீட்டனா். 2 வயதுள்ள அந்தப் பெண் மான், இரை தேடி வந்தபோது நாய்கள் கடித்து இறந்திருக்கலாம் என அவா்கள் தெரிவித்தனா். ஓட்டப்பிடாரம் கால்நடை மருத்துவா்கள் கூறாய்வு செய்ததையடுத்து, மான் சடலம் புதைக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் 100% வெற்றி : எஸ்டிகே ராஜன் அணியினர் பேட்டி
திங்கள் 15, டிசம்பர் 2025 8:04:02 AM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:52:26 AM (IST)

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சுதேசி திருவிழா டிச. 26இல் தொடக்கம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 7:32:18 AM (IST)

திருச்செந்தூரில் 6 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 7:28:04 AM (IST)

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)










