» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சேறும் சகதியுமாக நாசரேத் சாலைகள் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!
திங்கள் 27, நவம்பர் 2023 12:04:21 PM (IST)

நாசரேத்தில் சேறும் சகதியுமாக உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பேரூராட்சி வார்டு எண்18 இல் சேத்திரபாலன் தெருவில் பல ஆண்டுகளாகியும் இது வரை ரோடு போடவில்லை. பிள்ளையன்மனை கிராம மக்கள் மர்காஷியஸ் பள்ளி மாணவர்கள், நாசரேத் கைத்தொழில் பாடசாலையில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் சேத்திரபாலன் தெரு வழியாகத்தான் செல்ல வேண்டும்.
அதுபோல செல்வாய்கிழமை வாரச் சந்தைக்கு செல்லும் பிள்ளையன்மனை பகுதி மக்கள் மாதாவனம்,சேத்திரபாலன் தெரு வழியாகத்தான் செல்ல வேண்டும்.ஆனால் பல ஆண்டுகளாகியும் சேத்திர பாலன் தெருவில் பேரூராட்சிக்கு சொந்தமான பாதையில் எதற்காக ரோடு போடவில்லை என்பது தெரியவில்லை.உடனே ரோடு வசதி அமைத்து தரும்படி இப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் ஓய்.எம்.சி.ஏ. சதுக்கம், திரவியபுரம், திருமறையூர், தூய யோவான் பெண்கள் மேல்நிலை, ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவ, மாணவிகள் சேத்திரபாலன் தெரு வழியாக தான் செல்வார்கள். ஆனால் பல ஆண்டுகளாக இந்நாள் வரை சேத்திரபாலன் தெரு பேருராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரோடு போடவில்லை. உடனே நடவடிக்கை எடுத்து ரோடு வசதி அமைத்து தருமாறு பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் நாசரேத் மர்காஷிஸ் கல்லூரிக்கு செல்லும் கல்லூரி மாணவிகள் நாசரேத் சேத்திரபாலன் தெரு வழியாத்தான் செல்வார்கள்.ஆனால் இந்த தெருவை சீரமைக்க பல ஆண்டுகளாக மனு கொடுத்தும் இந்நாள் வரை சாலை வசதி செய்து கொடுக்கவில்லை. பொதுமக்கள், மாணவர்கள் நலனை கருத்திற்க கொண்டு சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் 100% வெற்றி : எஸ்டிகே ராஜன் அணியினர் பேட்டி
திங்கள் 15, டிசம்பர் 2025 8:04:02 AM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:52:26 AM (IST)

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சுதேசி திருவிழா டிச. 26இல் தொடக்கம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 7:32:18 AM (IST)

திருச்செந்தூரில் 6 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 7:28:04 AM (IST)

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)










