» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மேல்மருவத்தூரில் தைப்பூச இருமுடி விழா: சக்தி மாலை அணிந்து பக்தர்கள் விரதம் தொடக்கம்
ஞாயிறு 26, நவம்பர் 2023 5:37:41 PM (IST)

தைப்பூச இருமுடி விழாவை முன்னிட்டு மேல்மருவத்தூருக்கு தூத்துக்குடி மாவட்ட செவ்வாடை பக்தர்கள் சக்தி மாலை அணிந்து விரதத்தை துவக்கினர்.
மேல்மருவத்தூர் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அம்மா அவர்களின் அருளாசியுடன் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச இருமுடி விழா டிசம்பர் 1ம் தேதி தொடங்கி ஜனவரி மாதம் 24ம் தேதி வரை நடைபெறுகிறது. தைப்பூச இருமுடி விழாவில் கலந்துகொள்ள தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள், சக்தி பீடங்களில் இருந்து செவ்வாடை பக்தர்கள் சக்தி மாலை அணிந்து விரதமிருந்து இருமுடி கட்டிச்செல்லும் நிகழ்ச்சி தொடங்கியது.
சக்தி மாலை அணியும் நிகழ்ச்சியை கோவில்பட்டி இந்திராநகரில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆன்மிக இயக்க தலைவர் சக்திமுருகன் தொடங்கிவைத்தார். கோவில்பட்டி, தூத்துக்குடி, மந்திதோப்பு, இளையரசனேந்தல், கழுகுமலை, விளாத்திகுளம், நாகலாபுரம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், கடம்பூர், புதூர், முத்துசாமிபுரம், எட்டையபுரம், பிள்ளையார்நத்தம் உட்பட மாவட்டம் முழுவதும் சக்தி மாலை அணியும் நிகழ்ச்சி தொடங்கியது.
சக்தி மாலை இருமுடிகட்டிச் செல்லவிரும்பும் பக்தர்கள் தங்களுக்கு அருகில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் / சக்தி பீடங்களை தொடர்புகொள்ளலாம். இருமுடி பக்தர்களின் வசதிக்காக அதிவேக இரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்ல தெற்கு இரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிகழ்ச்சியில், ஆன்மிக இயக்க மகளிர் இணைச்செயலாளர் பத்மாவதி, கோவில்பட்டி வட்டத் தலைவர் அழகர்சாமி, மன்ற தலைவி ராஜலட்சுமி, பொறுப்பாளர்கள் ஆழ்வார், பேச்சியம்மாள், திருவிக நகர் சக்தி பீட துணைத் தலைவர் திருஞானம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் 100% வெற்றி : எஸ்டிகே ராஜன் அணியினர் பேட்டி
திங்கள் 15, டிசம்பர் 2025 8:04:02 AM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:52:26 AM (IST)

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சுதேசி திருவிழா டிச. 26இல் தொடக்கம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 7:32:18 AM (IST)

திருச்செந்தூரில் 6 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 7:28:04 AM (IST)

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)










