» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஜவுளிக்கடை கட்டுமான பணியால் அதிரும் வீடுகள்: பொதுமக்கள் புகார்..!
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 3:20:47 PM (IST)
தூத்துக்குடியில் ஜவுளிக் கடையின் கட்டுமான பணிகளால் அருகில் உள்ள வீடுகள் அதிர்வதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி வி.இ. ரோடு, ரைஸ்மில் தெருவைச் சேர்ந்த மக்கள் மாநகராட்சி ஆணையருக்கு அளித்துள்ள மனுவில், "ரைஸ்மில் தெருவில் உள்ள ஜவளிக் கடையில் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. அந்த கடையின் கட்டிடங்களை இடிக்கும் போது அப்பகுதியில் உள்ள வீடுகளில் பூகம்பம் ஏற்பட்டது போல் அதிர்வுகளையும், சத்தத்தையும் ஏற்படுத்துகிறது.
இதனால் அங்குள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து அந்த நிறுவனத்தில் முறையிட்டபோது 2 நாட்கள் பணி நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் இரவு பகலாக பணி நடைபெற்று வருகிறது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் என மக்கள் அனைவரும் இரவு முழுவதும் தூங்க முடியாமல் அச்சத்தில் வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் 100% வெற்றி : எஸ்டிகே ராஜன் அணியினர் பேட்டி
திங்கள் 15, டிசம்பர் 2025 8:04:02 AM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:52:26 AM (IST)

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சுதேசி திருவிழா டிச. 26இல் தொடக்கம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 7:32:18 AM (IST)

திருச்செந்தூரில் 6 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 7:28:04 AM (IST)

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)










