» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர்கள் திடீர் மறியல் போராட்டம்: தூத்துக்குடியில் பரபரப்பு!!

வியாழன் 10, ஆகஸ்ட் 2023 12:43:21 PM (IST)



தூத்துக்குடியில் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்களின்  பெற்றோர்கள் திடீர் மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடியில் பாளைங்கோட்டை மெயின் ரோட்டில் மறவன் மடம் பகுதியில் அமிர்தா வித்யாலயம் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளை பெற்றோர்கள் தங்களது வாகனத்தில் அழைத்து வந்து பள்ளி வளாகத்தில் விட்டுச் செல்வது வழக்கம். இந்நிலையில், தற்போது தலைமை ஆசிரியர் செந்தில்குமார் என்பவர் பள்ளி வளாகத்திற்குள் பெற்றோர்களின் வாகனம் வரக்கூடாது என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். மெயின் ரோட்டில் வாகனத்தை நிறுத்திவிட்டு குழந்தைகளை அழைத்துச் சென்றால் விபத்து அபாயம் ஏற்படும் என்று பள்ளி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகம் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து பெற்றோர்கள் இன்று காலை தூத்துக்குடி - பாளை., தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் சுமார் 1 மணி நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுரேஷ், புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் அன்பரசி,  கிராம நிர்வாக அதிகாரி பிரேமலதா ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பள்ளி நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 


மக்கள் கருத்து

RajaAug 11, 2023 - 03:24:53 PM | Posted IP 162.1*****

Tamil selvan mind your words

reply to TamilselvanAug 11, 2023 - 11:41:19 AM | Posted IP 162.1*****

antha school vilangatha school endru ethan adipadayil koorukirai? ungaludaya thanipatta karuththai ingae thinikkavendam.

P.sankarAug 10, 2023 - 03:56:32 PM | Posted IP 172.7*****

இது தொடர்பாக CEO மற்றும் தனியார் பள்ளி ட்டமைப்பில் புகார் அளிக்கலாம் மேலும் அமிர்தாம்மாவிர்க்கு தலைமை ஆசிரியர் மீது புகார் அளிக்கலாம்

தமிழ்ச்செல்வன்Aug 10, 2023 - 12:59:18 PM | Posted IP 172.7*****

அதுவே ஒரு வௌங்காத ஸ்கூல்... அங்க போயி உங்கள யாரு பிள்ளைய சேர்க்க சொன்னான்? அந்த ஸ்கூலுக்கு பாதையே கிடையாதையா...

பெற்றோர்Aug 10, 2023 - 12:53:10 PM | Posted IP 172.7*****

உள்ளே வந்தால் பிரச்சினை தான்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital

CSC Computer Education






Thoothukudi Business Directory