» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வ.உ.சி கல்வியியல் கல்லூரில் உலக யோகா தினம்
வியாழன் 29, ஜூன் 2023 10:53:22 AM (IST)

வ.உ.சி கல்வியியல் கல்லூரியும் இந்திய தத்துவவியல் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து உலக யோகா தினத்தை முன்னிட்டு ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் உலக அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக நடத்தப்பட்டது.
இந்த தேசிய கருத்தரங்கத்தில் கல்வியியல் கல்Âரி முதல்வர் முனைவர் த.கனகராஜ் வரவேற்றார். வ.உ.சிதம்பரம் கல்லூரியின் முதல்வர் முனைவர் சொ.வீரபாகு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். திருநெல்வேலி மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி மற்றும் விளையாட்டு துறை தலைவரும், உதவிப் பேராசிரியருமான முனைவர் எஸ். ஆறுமுகம் முதல் அமர்வில் கருத்துரை வழங்கினார்.
பரமக்குடி அரசு கலைக் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் முனைவர்.எஸ்.பிரசாத் இரண்டாம் அமர்வில் கருத்தரை வழங்கினார். புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் விளையாட்டுத் துறை அதிகாரி முனைவர்.எஸ்.பாபு அவர்கள் மூன்றாம் அமர்வில் கருத்துரை வழங்கினார். ஷைன் யோகா சக்தி பயிற்சி மையத்தின் செயலர் எம்.சுந்தரவேல், சி.தனலெட்சுமி ஆகியோர் நான்காம் அமர்வில் கருத்துரையும் யோகா செய்முறைப் பயிற்சியும் மாணவர்களுக்கு வழங்கினர்.
கருத்தரங்கில் யோகக்கலையின் அடிப்படையான எட்டு நிலைகளும், யோகக் கலை வழியாக நோய்களை தடுக்கும் முறைகள், சித்தர்களின் வாழ்வியல் நெறிகள் குறித்து கருத்தாளர்கள் கருத்துரை வழங்கினர். இக்கருத்தரங்கத்தின் அமைப்புச் செயலாளராக முனைவர் சே.குரு வாசுகி முன்னிருந்து இந்நிகழ்வினை நடத்தினார். நிகழ்வின் இறுதியாக முனைவர் சு.பிரேமலதா நன்றியுரை கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாய் குறுக்கே வந்ததால் ஆட்டோ கவிழ்ந்து விபத்து : 10 மாணவிகள் காயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:17:22 AM (IST)

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் 100% வெற்றி : எஸ்டிகே ராஜன் அணியினர் பேட்டி
திங்கள் 15, டிசம்பர் 2025 8:04:02 AM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:52:26 AM (IST)

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சுதேசி திருவிழா டிச. 26இல் தொடக்கம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 7:32:18 AM (IST)

திருச்செந்தூரில் 6 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 7:28:04 AM (IST)











க் இரத்தின சபாபதி விலங்கியல் துறைJun 30, 2023 - 12:08:32 AM | Posted IP 172.7*****