» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தென்திருப்பேரை கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம் கோலாகலம்
வியாழன் 13, ஏப்ரல் 2023 2:47:15 PM (IST)

தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நவதிருப்பதி கோவில்களில் 7-வது தலமாகவும் , 108 திவ்ய தேசங்களில் 53-வது தலமாகவும் சுக்கிரன் தலமாக அமைய பெற்ற தலம் தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவில் ஆகும். தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் தென்திருப்பேரை யில் மீன் வடிவ காதணி அணிந்த மகர நெடுங்குழைக்காதர், குழைக்காதர் நாச்சியார், திருப்பேரை நாச்சியார் ஆகியோ ருடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
ஆண்டுதோறும் பங்குனி மாதம் 10 நாட்கள் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு பங்குனி திருவிழா கடந்த 5-ந் தேதி காலை 7.15 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9-ந்தேதி இரவு 9.30 மணிக்கு கருட சேவை நிகழ்ச்சியும், அன்ன வாகன நிகழ்ச்சியும், 10-ந்தேதி யானை வாகனத்திலும், 11-ந் தேதி மாலை 5 மணிக்கு இந்திர விமானத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்தார்.12-ந்தேதி காலை உற்சவ மூர்த்தி ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார்களுடன் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அன்றைய தினம் மாலை 4 மணிக்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளி புறையூர் ஆணையப்பபிள்ளை சத்திரம் வீதி புறப்பாடு நடைபெற்றது.
9-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 8 மணிக்கு மேஷ லக்கனத்தில் உற்சவர் நிகரில் முகில்வண்ணன் தேரில் எழுந்தருளினார். அதை தொடர்ந்து 9 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்ட நிகழ்ச்சியில் வள்ளியூர் குழைக்காதர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், நிர்வாகிகளுக்கு கோவில் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
தேர் கீழ ரத வீதியில் இருந்து புறப்பட்டு தெற்கு ரத வீதி வழியாக மேல ரத வீதி வரை பக்தர்கள் வடம் பிடித்து கோவிந்தா கோவிந்தா என கரகோஷத்துடன் இழுத்து வந்தனர். பின்பு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தேரோட்டம் நிறுத்தப்பட்டது. மாலையில் மீண்டும் தேரோட்டம் மேல ரத வீதியிலிருந்து புறப்பட்டு வடக்கு ரத வீதி வழியாக வந்து இன்று மாலையில் கோவில் நிலையை வந்தடையும். நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு தாமிரபரணி நதியில் தீர்த்தவாரியும், அதைதொடர்ந்து பல்லக்கில் தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலமும், வெற்றிவேர் சப்பம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஶ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன் தலைமையில், ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணி வண்ணன், சப்- இன்ஸ்பெக்டர் செல்வன் மற்றும் போலீசார், தீயணைப்பு துறை அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். தேரோட்ட விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கிருஷ்ண முர்த்தி, ஆய்வாளர் சிவலோக நாயகி, தக்கார் அஜித் மற்றும் உபயதாரர்கள், அலுவலக ஊழியர்கள், செய்து இருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் 100% வெற்றி : எஸ்டிகே ராஜன் அணியினர் பேட்டி
திங்கள் 15, டிசம்பர் 2025 8:04:02 AM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:52:26 AM (IST)

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சுதேசி திருவிழா டிச. 26இல் தொடக்கம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 7:32:18 AM (IST)

திருச்செந்தூரில் 6 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 7:28:04 AM (IST)

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)










